மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச் சருமான தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான "பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா " எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
நூலின் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான தமிழ்த்திரு. சிவலிங்கம் சதீஸ்குமார் வழங்குவதுடன் நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.அஸ்ரப் செய்யவுள்ளார் இவ்விழாவில் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் சிறப்புரை ஆற்றுவதுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் பிரதி தவிசாளர் ஏ.எம்.எம்.தெளபீக் நன்றியுரையாற்றவுள்ளார்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )
