(எம்.எச்.எம்.அன்வர்)
'நீதியாக ஆட்சி செய்த ஆட்சியாளனுக்கு மறுமை நாளில் அர்ஷின் நிழல் கிடைக்கும் இதற்காகவே நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்'
இவ்வாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடும் பொறியியலாளருமான எம் எம் அப்துர்ரஹ்மான் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தெரிவித்தார்
அவர் மேலும் தனதுரையில்
நாங்கள் பாராளுமன்ற பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களல்ல எமது மக்களின் அமானிதமாக வழங்கப்படும் இந்த பதவியை சரியாக பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்று சிலரின் பேச்சுக்கள் பொய்யான கதைகள் மற்றும் செயற்பாடுகளைப்பார்த்தால் இவர்கள் மறுமையில் என்ன சொல்லப்போகிறார்கள் கப்றுக்குள் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்லப்போகிறார்கள் என்று நினைக்கும்போது கவலையாகவுள்ளது
பாராளுமன்ற பதவியானது மிகவும் பெறுமதிவாய்ந்தது சொகுசாக வாழ்வதற்கும் வெளிநாட்டுப்பயணங்கள் செல்வதற்கும் அபிவிருத்திகள் மாத்திரம் செய்வதற்கும் அது பயன்படுவதில்லை மாறாக மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மக்கள் சுய உரிமையுடனும் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டு செயலாற்றவே நாம் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன் இந்த பதவியின் ஊடாக இறைவனுக்கு பொருத்தமான வகையில் கடமையை மேற்கொண்டு மறுமை நாளில் ஏழு பேருக்கு வழங்கப்படும் அர்ஷின் நிழலில் ஒரு கூட்டமான நீதியான ஆட்சியாளனுக்கு கொடுக்கப்படும் அந்த இடத்தை பெறவே தான் ஆசைப்படுகின்றேன்
பதவிக்கு ஆசைப்பட்டு இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகின்றனர் அவ்வாறல்ல பல தடவைகள் பாராளுமன்ற பதவிகள் எங்களைத் தேடி வந்தன உதாரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா வெளிநாடு சென்ற போது இந்த பதவியை எடுக்குமாறு தனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது
தாய்மார்களே சகோதரிகளே சிந்தியுங்கள் எமக்கு மாற்றம் வேண்டும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் எந்த சமூகம் தானாக மாற்றத்தினை கொண்டு வராதவரை தான் கொண்டுவரப் போவதில்லை என தெரிவித்துள்ளான் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த மரச்சின்னத்திற்கு வாக்களித்து தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள்
மகிந்த அரசை வீழ்த்தி மைத்திரி பால சிரிசேன ஜனாதிபதியாவதற்கு எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாரிய பங்களிப்பினை செய்ததை தாங்கள் அறிவீர்கள் சிறந்த ஆட்சி மலர்வதற்கு தங்களால் ஆன முழு அதிகாரத்தையும் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் பயன்படுத்துவோம்
பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் காசுக்காக வோட்டுப் போடும் சமூகமாக நீங்கள் மாறாது தன்மானத்துடனும் சுயகௌரவத்துடனும் வாழ எம்மை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அப்துல் றகுமான் தனதுரையில் மேலும் தெரிவித்தார்
