Featured Home (TOP)

Recent Comments

Monday, August 24, 2015

avathani Media Network

அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி தேசிய அரசை அமைப்பதில் சிக்கல்

அமைச்சுப் பத­வி­களை பகிர்­வதில் இழு­பறி நிலைமை தலைதூக்­கி­யுள்­ளதால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டை­யே­யான தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம், எதிர்க்­கட்சி விரும்­பா­விட்டால் தேசிய அரசாங்க யோச­னையைக் கைவிட்டு தனித்து ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சி­ய­மைக்கதயார் என்றும் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலையிட்டு இந்த விடயத்தில் உரிய தீர்வை காண்பார் என்ற நம் பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்­பாக கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்­கையில், புதிய அர­சாங்­கத்தில் அமைச்சர் பத­வி­களை ஏற்கும் நிகழ்வு இன்று இடம்­பெற மாட்­டாது.இந்நிகழ்வு மேலும் கால­தா­ம­த­மாகும் நிலைமை தலை­தூக்­கி­யுள்­ளது.
ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­னவுடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்க ஏற்­ப­டுத்திக் கொண்ட இணக்­கப்­பாட்­டுக்கு அமை­யவும், ஜனா­தி­ப­திக்கு மதிப்­ப­ளித்­துமே ஐக்­கிய தேசியக் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க விருப்பம் தெரி­வித்­தது.
கடந்த வெள்ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சேன முன்­னி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்ற பின்னர், மேற்­கண்ட இணக்­கப்­பாட்­டிற்கு அமை­யவே சுதந்­திரக் கட்­சி­யுடன் இரண்டு வரு­டங்­க­ளுக்­கான தேசிய அரசாங்கத்தை அமைப்­ப­தற்­கான உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
ஆனால் இன்று அதிகளவில் அமைச்­ச­ர் பத­வி­கள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென்று சுதந்­திரக் கட்­சி­யினர் கோரு­கின்­றனர். இக் கோரிக்கை அநீ­தி­யான கோரிக்­கை­யாகும்.
நடந்து முடிந்த பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு 107 ஆச­னங்கள் கிடைத்­துள்­ளன. எனவே எமக்கு இன்னமும் ஆட்­சி­ய­மைக்க 6 பேரின ஆத­ரவே தேவைப்­ப­டு­கின்­றது. ஆனால் தற்­போது 25 பேர் எம்­முடன் இணை­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். இதனால் எதிர் கட்­சி­யினர் எம்­முடன் இணைந்­தது தேசிய அரசை ஏற்­ப­டுத்த விரும்­பா­விட்டால் நாம் எமக்­குள்ள 107 ஆச­னங்­க­ளுடன் எமக்கு ஆத­ரவு வழங்­கு­வோரை இணைத்துக் கொண்டு ஆட்­சி­ய­மைக்க தயா­ரா­க­வுள்ளோம்.

அதிக ஆச­னங்­களை ஐக்­கிய தேசிய முன்­னணி பெற்­றுள்ள நிலையில் எப்­படி ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அதிக அமைச்சுப் பத­வி­களை வழங்க முடியும்? அவ்­வாறு கோரு­வது நியா­ய­மற்­ற­தாகும். இதற்கு இணங்­கவும் முடி­யாது. எனவே எமது பாதையில் நாம் தனித்து பய­ணிக்­கலாம்.
அமைச்சுப் பத­வி­களை பெற்றுக் கொள்­வதில் இரு தரப்­பிலும் இழு­பறி நிலை தலை­தூக்­கி­யுள்­ளது. எனவே இன்­றைய தினம் அமைச்சுப் பத­வி­களை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு இடம்­பெ­றாது. அது கால தாம­த­மாகும்.
கடந்த 1989 ஆம் ஆண்­டுக்கு பின்னர் இலங்­கையில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் 105, 106, 107 ஆச­னங்கள் பெறப்­பட்­டன. எனவே தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­ய­வில்லை. 2001 ஆம் ஆண்­டிலும் ஐக்­கிய தேசியக் கட்சி 104 ஆச­னங்­க­ளையே பெற்­றது. 2010 ஆம் ஆண்டில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 140 பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் இன்று 2015 இல் இடம்பெற்ற தேர்தலில் எமக்கு 107 ஆசனங்கள் கிடைத்தள்ளன. ஆட்சியமைக்க ஆறுபேரின் ஆதரவே தேவை என்றும் அவர் தெரிவித்தார்.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :