Featured Home (TOP)

Recent Comments

Wednesday, August 26, 2015

avathani Media Network

மட்டக்களப்பில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு

மட்டக்களப்பில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதனால் வாவி மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தற்போது மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளதனால் கடலுக்குச் செல்லுதல் மற்றும் கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிப்பதனால் கடல் மீன் பிடியில் பாதிப்பு ஏற்பட்டள்ளதாக மீன் பிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாவியில் மீன்படி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டள்ளதனால் செத்தல் மணலை மற்றும் கோல்டன் மீன்கள் பிடிபடுவதாக வாவித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வாவியில் மீன் பிடிப்போரும் வெப்பநிலை அதிரிப்பினால் வாவியில் நீர் வற்றியுள்ளதோடு நீpன் மேற்பரப்பும் வெப்பமேறுவதனால் இரவினிலும் மற்றும் அதிகாலையிலும் மீன்களைப் பிடிப்பதாகத் தெரிவித்தனர்.
குறித்த வகையான மீன்கள் சில்லறையாக ரூபாய் 300 முதல் 500 வரை விற்பனை செய்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வாவி மீன்பிடியை நம்பி 13,265 மீனவக் குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :