Featured Home (TOP)

Recent Comments

Friday, August 14, 2015

avathani Media Network

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?
NTJயுடன் சகோதரர் MLAM ஹிஸ்புல்லாஹ் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அவரே முறித்துக் கொண்டாரா?

அன்புள்ள சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்!

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சகோதரர்களான MLAM ஹிஸ்புல்லாஹ், MM. அப்துர்ரஹ்மான், M.F.M. சிப்லி பாறூக், M.S.M. ஷாபி, ALM றூபி ஆகியோருடன் 43 நிபந்தனைகள் கொண்ட ஓர் ஒப்பந்தம் எம்மால் செய்யப்பட்டதை தாங்கள் நன்கறிவீர்கள்.

அவ்வொப்பந்தம் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பௌதீக நலன் சார்ந்த ஒப்பந்தமல்ல. அதாவது பள்ளி கட்டித் தர வேண்டுமென்றோ, எமது ஜமாஅத்திற்கு சுற்று மதில் அமைத்துத் தர வேண்டுமென்றோ, உலமாக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென்றோ நாம் ஒப்பந்தம் செய்யவில்லை! அல்லாஹ்வின் அருளால் நமது ஒப்பந்தத்தைச் சரியாகப் படிக்கும் எவரும் 'எமது ஒப்பந்தம் தேர்தலுக்கான சந்தர்ப்பவாத ஒப்பந்தமல்ல' என்பதையும், சுகபோக அரசியலை ஒழித்து உரிமை அரசியலை நிலை நிறுத்தும் அறிவுபூர்வமான ஒப்பந்தம் என்பதையும் இலகுவில் புரிந்து கொள்வார். அல்ஹம்துலில்லாஹ்.

ஒப்பந்தம் ஏற்படுத்திய ஓர் மறுமலர்ச்சி!

தேர்தல் காலம் வந்து விட்டால் அரசியல்வாதிகள் இசை கலந்த பாடல்களை ஒலிபரப்புவது அனைவரும் அறிந்ததே! இஸ்லாம் ஹராமாக்கிய இந்த இசைக் கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் முற்றாக கைவிட வேண்டுமெனும் நன்நோக்கில் நமது ஒப்பந்தத்தில் முதலாம் விதி நான்காவது ஷரத்தில் 'தங்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலோ அல்லது பிரச்சார மேடைகளிலோ இசையுடன் கலந்த பாடல்கள் ஒலிபரப்பப்படுவதை தாங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.' எனும் நிபந்தனையை விதித்திருந்தோம். 

அதனை ஒப்புக் கொண்டு கைச்சாத்திட்ட அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் மேடைகளில் இசையுள்ள பாடல்களைத் தவிர்த்து விட்டு கிராஅத், கஸீதா போன்றவற்றை ஒலிபரப்பியதை தாங்கள் அவதானித்திருப்பீர்கள். (சில அரசியல்வாதிகளால் இசைக் கட்டுப்பாடு அவ்வப்போது மீறப்பட்டு சீர்செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது) 

கடந்த 03.08.2015, 04.08.2015 ஆகிய இரு திகதிகளில் மேற்கண்ட அரசியல்வாதிகளுடன் நாம் செய்த ஒப்பந்தம் 'சரியாகப் பேணப்படுகின்றதா? அல்லது வரம்பு மீறப்படுகின்றதா?' என்பதைக் கண்காணிக்க 11 பேர் கொண்ட ஒரு குழுவை நாம் நியமனம் செய்தோம்.

கண்காணிப்புக் குழு தெரிவித்ததென்ன?

ஒப்பந்தம் செய்த அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை மாறி மாறி ஒருவர் மீறு மற்றவர் குற்றம் சுமத்தும் கைங்கரியம் நடந்தேறி வருவதாக எமது கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். நமது ஒப்பந்தத்தில் முதலாவது விதி ஏழாவது ஷரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பது தொடர்பில் பின்வருமாறு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

அதாவது 'பிற அரசியல்வாதிகள் மீதோ, அரசியல் கட்சிகளின் மீதோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தாங்கள் சுமத்தக் கூடாது. குற்றச்சாட்டைக் கூறி விட்டால் தகுந்த சான்றுகள் மூலம் அதை நிரூபணம் செய்ய முன்வர வேண்டும்'

இந்த ஷரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நேருக்கு நேர் முன்வைத்து நிரூபிக்கும் அமர்வொன்றை நாம் ஏற்பாடு செய்தோம்.

இந்த அமர்வு கடந்த 13.08.2015 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. குற்றம் சுமத்தும் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரு மேசைக்குக் கொண்டு வந்து பின்னர் நேருக்கு நேர் வைத்து குற்றச்சாட்டுக்களை எடுத்துச் சொல்லி அதனை நிறூபிக்குமாறு சொல்வதுதான் ஆரோக்கியமானதும், அறிவுபூர்வமானதும், மார்க்கம் சொல்லும் அழகிய வழிமுறையுமாகும்.

இதற்கான அழைப்புக் கடிதம் 10.08.2015 அன்று சகோதரர் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ், சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான், சகோதரர் ஆ.கு.ஆ. சிப்லி பாறூக் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 'பிற அரசியல்வாதிகள் மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் தாங்கள் ' பிரதானமானது' எனக் கருதும் மூன்று குற்றச்சாட்டுக்களை எழுத்தில் முன்கூட்டித் தருமாரும், அதிலிருந்து இரண்டு நாள் கழித்து அதாவது 13ம் திகதி ' நிறூபிக்கும் அமர்வுக்கு' உதவியாளர் ஒருவரை அழைத்து வருமாறும் கோரி கடிதங்களை அனுப்பி வைத்தோம்.

ஒப்பந்தம் செய்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்?

சகோதரர் ஆ.கு.ஆ. ஷிப்லி பாரூக் மற்றும் சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான் ஆகியோர் 'இந்நிகழ்வு வரவேற்கத்தக்கதென்றும், நாம் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை அவருக்கு முன்னால் எடுத்து வைத்து அதனை நிரூபிக்கத் தயார் என்றும், எம்மீது அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கு எம்மால் பதில் சொல்ல முடியுமெனவும் கூறி குற்றச்சாட்டுப் பட்டியலுடன்' பதில் கடிதங்களை அனுப்பி வைத்தனர்.
ஆனால் சகோதரர் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ்வோ '13ம் திகதி தனக்கு தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் தன்னால் நிரூபிக்கும் மேசைக்கு வர முடியாது' எனக் கூறி ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். 

அதற்கு 11.08.2015 அன்று நாம் நியாயமான 07 கேள்விகளை முன்வைத்து பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்தோம். அதற்கு அவர் பதில் சொல்லவுமில்லை! 'குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வுக்கு' வரவுமில்லை!

நாம் முன்வைத்த அடுக்கடுக்கான 07 கேள்விகள் இதுதான்!

01. 'குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வுக்கு வருகை தர தனக்கு நேரமில்லை' எனக் கூறுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை! காரணம் கடந்த 14.08.2015 அன்று நீங்கள் எம்மோடு செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தத்தில் 'பிற அரசியல்வாதிகள் மீதோ, அரசியல் கட்சிகளின் மீதோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தான் சுமத்தமாட்டேன் என்றும், குற்றச்சாட்டைக் கூறி விட்டால் தகுந்த சான்றுகள் மூலம் அதை நிரூபணம் செய்ய முன்வருவேன் எனவும் கூறி கையெழுத்திட்டுள்ளீர்கள். இவ்வாறு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு விட்டு 'எனக்கு நேரமில்லை' எனக் கூறுவது ஒப்பந்த மோசடியாக உங்களுக்குத் தெரியவில்லையா?

02. மேடைக்கு மேடை பிற அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்களைச் சொல்ல நேரம் எடுக்கும் நீங்கள், அதை நிரூபிக்க அழைக்கும் போது மட்டும் 'நேரமில்லை' எனக் கூறுவது உங்கள் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதைக் காட்டாதா?

03. குற்றச்சாட்டுக்களை நிறூபிக்கும் அமர்வுக்கு வருகை தருமாறு கூறி நாம் உங்களுக்கு கடிதம் அனுப்பியதைப் போன்றுதான் சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான் மற்றும் சகோதரர் ஆ.கு.ஆ. ஷிப்லி பாரூக் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியிருந்தோம். அவர்களோ இந்நிகழ்வுக்கு வருகை தர தமக்கு முழு சம்மதம் எனக் கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். நீங்கள் மாத்திரம் தான் 'தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் எனக்கு நேரமில்லை' எனக் கூறுகிறீர்கள். அப்படியாயின் சகோதரர் ஷிப்லிக்கும், சகோதரர் அப்துர் ரஹ்மானுக்கும் தேர்தல் பணிகள் இல்லையா? உங்களுக்கு மட்டும் தான் தேர்தல் பணிகள் இருக்கிறதா?

04. 'தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் எனக்கு நேரமில்லை' எனக் கூறுகிறீர்கள்! குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதை விட அப்படியென்ன தேர்தல் பணி உங்களுக்கு இருக்கிறது? எனக் கேட்க விரும்பிகிறோம்.

05. 'அதிகமான தேர்தல் பணிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் 13ம் திகதி நேரடியாக தங்களின் மேசைக்கு என்னால் வர முடியாது' எனக் கூறுகிறீர்கள்! 13ம் திகதிதான் உங்களுக்கு வர முடியாவிட்டாலும் 12ம் திகதி அல்லது 14ம் திகதியாவது வருவேன் எனக் கூறலாமல்லவா?

06. எம்முடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ள நேரம் ஒதுக்கிய நீங்கள், அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி 'குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க' மட்டும் நேரம் ஒதுக்கத் தயங்குவதேன்?

07. 'தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் என்னால் நிரூபிக்கும் மேசைக்கு வர முடியாது' எனக் கூறுகிறீர்கள். நமது நிகழ்வோ 13ம் திகதி காலை 09.00 மணியிலிருந்து நன்பகல் 12.00 மணி வரைதான்!!! வெறும் மூன்று மணித்தியால நிகழ்வொன்றுக்கு அதுவும் காலை நேரத்தில் வருகை தர முடியாமல் உங்களைத் தடுத்து நிறுத்தும் தேர்தல் பணியென்ன?

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!

பிற அரசியல்வாதிகள் மீது பாமர மக்கள் மத்தியில் தைரியமாகக் குற்றம் சுமத்தும் நீங்கள் அந்த அரசியல்வாதிகளுக்கு முன்னால் வந்து குற்றம் சுமத்தத் தயங்கக் கூடாது! குற்றம் சுமத்துபவர்களை நிரூபிக்க வருமாறு அழைக்கும் போது 'தனக்கு நேரமில்லை', 'வேலைப்பழுவாக இருக்கிறது', 'களைப்பாக இருக்கின்றது' என்றெல்லாம் கூறி நழுவுவது அவதூறு செல்பவர்களின் வழக்கமாகும்.

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!

அவதூறு சொல்வது இலேசுபட்ட பாவமல்ல. 80 கசைடிகளுக்குத் தகுதியான பாவமாகும். அற்ப அரசியல் சுக போகத்திற்காக யாரும் யார் மீதும் அவதூறு சொல்லக் கூடாது! நீங்கள் மேடைகள் தோறும் பாமர மக்களிடம் கூறி வரும் குற்றச்சாட்டுக்களை உலமாக்களான எங்களுக்கும், நீங்கள் குற்றம் சுமத்தும் நபர்களுக்கும் மத்தியில் முன்வையுங்கள்! என்றுதான் அழைக்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்: 'நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி துன்புறுத்துகிறார்களோ அத்தகையவர்கள் அவதூறையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்' (அல்குர்ஆன் 33:58)

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!

'நேரமில்லை' என்ற உங்கள் முடிவைப் பரிசீலியுங்கள்! இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 13ம் திகதி (வியாழக்கிழமை) அன்று குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் எமது நிகழ்வுக்கு தாங்கள் வருகை தராமல் விட்டால் உங்களுடனான ஒப்பந்தம் ரத்தாகி விடுவதுடன், உங்களுக்கான எமது ஆதரவை பகிரங்கமாக விலக்கிக் கொள்வோம். அத்துடன் எக்காலத்திலும் உங்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யமாட்டோம் எனச் சொல்லி வைக்க விரும்புகிறேம்.

அன்புள்ள சகோதரர்களே!

நாம் குறிப்பிட்ட அந்த 13ம் திகதி (நேற்று) குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் மேசைக்கு சகோதரர் ஆ.கு.ஆ. ஷிப்லி பாரூக் அவர்களும், சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான் அவர்களும் தான் வருகை தந்தனர். சகோதரர் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ்வோ வருகை தரவில்லை! வேறு திகதிகளைக் குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பவுமில்லை!

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் எனும் பொய்யா மொழிக்கு ஏற்ப அவரிடம் உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார். ஆனால் வரவில்லை. ஆதலால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ் குறித்து கீழ்காணும் நிலைப்பாடை எடுத்து பகிரங்கமாக அறிவிக்கின்றது.

01. ஹிஸ்புல்லாஹ் ஆதாரமில்லாமல் பிறர் மீது அவதூறு சொல்பவர் என்றும்,
02. பொருளாதார விடயங்களில் மோசடி செய்பவர் என்றும்,
03. விமர்சனங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு பதில் சொல்லத் திராணியற்றவர் என்றும்,
04. ,வருக்கு வாக்களிப்பது அநியாயத்திற்குத் துணை போவதென்றும்,
05. ஒப்பந்த மோசடி செய்த ,வருடன் ஒரு காலத்திலும் Nவுது மீள் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்துக் கொள்கிறோம்.

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

ஒப்பந்த மோசடி செய்த ஹிஸ்புல்லாஹ்வுக்கு நீங்கள் வாக்களிக்காமல் ஒப்பந்தங்களைப் பேணி வரும் சகோதரர்களான ஆ.ஆ. அப்துர்ரஹ்மான், ஆ.கு.ஆ. சிப்லி பாறூக், ஆ.ளு.ஆ. ஷாபி யு.டு.ஆ றூபி ஆகியோரில் 'தாங்கள் விரும்பியோருக்கு வாக்களிக்க முடியுமென' கூறிக் கொள்கிறோம்.

தற்போது நமது ஒப்பந்தத்தைப் பேணி வரும் மேற்கண்ட சகோதரர்கள் ஒப்பந்த விதிகளை வரம்பு மீறும் வகையில் நடந்து கொண்டால் அவர்களுடனும் எமது ஒப்பந்த உறவை ரத்துச் செய்வதில் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம். அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: 'நீங்கள் நலவுக்கும், இறையச்சத்திற்கும் பரஸ்பரம் உதவியாக இருங்கள். பாவத்திற்கும், எல்லை கடந்து செல்வதற்கும் துணையாக இருக்காதீர்கள்.' (அல்குர்ஆன் 5:2)

அல்லாஹ் கூறுகிறான்: 'முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;! (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்!) ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;! மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்' (திருக்குர்ஆன் 04:135)

'இன்ஷாஅல்லாஹ் இன்று 14.08.2015 (வெள்ளிக்கிழமை) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்து ஏற்பாடு செய்யும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு திரையில் காண்பிக்கப்படும்.

வெளியீடு:
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
296, மீன்பிடி இலாகா வீதி, புதிய காத்தான்குடி - 03.
14.08.2015





avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :