Featured Home (TOP)

Recent Comments

Wednesday, August 26, 2015

avathani Media Network

கிழக்கு மாகாண சபையிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான ஐவருக்கும் சபையில் வாழ்த்து

கிழக்கு மாகாண சபையில் அமைச்­சர்­க­ளாகவும் உறுப்­பி­னர்­க­ளா­கவும் இருந்­த­வர்கள் ஐந்து பேர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்றுச் சென்­றுள்­ள­மைக்­காக அவர்­க­ளுக்கு கிழக்கு மாகாண சபையில் நேற்று வாழ்த்துத் தெரி­விக்­கப்­பட்­டது.
கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 9.30மணிக்கு பிரதித் தவி­சாளர் பிர­சன்னா இந்­தி­ர­குமார் தலை­மையில் ஆரம்­ப­மா­னது.
நேற்றைய சபை அமர்­வின்­போது கிழக்கு மாகாண சபையில் அமைச்­சர்­க­ளாகவும் உறுப்­பி­னர்­க­ளா­கவும் இருந்­த­வர்கள் ஐந்து பேர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று சென்­றுள்­ள­மைக்­காக அவர்­க­ளுக்கு வாழ்த்துத் தெரி­வித்து சபை நட­வ­டிக்­கை­களை பிரதித் தவி­சாளர் இந்­தி­ர­குமார் ஆரம்­பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண சபையில் இருந்து பாரா­ளு­மன்றம் சென்­ற­வர்­க­ளுக்கு வாழ்த்துத் தெரி­வித்து உரை நிகழ்த்­தினார்.
கிழக்கு மாகாண சபயில் இருந்து இலங்­கையின் உயர்ந்த சபை­யான பாரா­ளு­மன்­றத்­திற்குச் சென்­றுள்ள எமது உறுப்­பி­னர்­களை மக்கள் விருப்பத்­துடன் அவர்­களின் வாக்­குப்­ப­லத்துடன் அனுப்­பி­வைத்­துள்­ள­மை­யா­னது மக்­களின் தேவைக்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வேண்டும் என்­ப­தற்­கான சான்றே தவிர வேறொன்­று­மில்லை.
எனவே மக்கள் பிர­தி­நி­தி­க­ளான அனை­வரும் மக்­க­ளுக்­காற்ற வேண்­டிய பாரிய பணிகள் ஏராளம் உள்­ளன அவை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்றி போற்­றப்­படும் ஒரு பிர­தி­நி­தி­யாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்­து­கிறேன் என்றும் தனது வாழ்த்­து­ரையில் முதலமைச்சர் கூறினார்.
அதன்­பின்னர் அமைச்­சர்­க­ளான கே.துரை­ரா­ஜ­சிங்கம். ஆரி­ய­பதி கல­பதி, எஸ்.தண்­டா­யு­த­பாணி மற்றும் சகல உறுப்­பி­னர்­களும் தங்­க­ளது வாழ்த்­துக்­களைத் தெரி­வித்து உரை­யாற்­றினர்.
நேற்றைய சபை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம்.அன்வர், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. பாராளுமன்றம் தெரிவான ஐந்து உறுப்பினர்களுக்குப் பகரமாக எவரும் சபைக்கு சமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :