(அபூ நிதா)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேயசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றப் பதவி வழங்கப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆதரவாளர்களால் காத்தான்குடியில் பரவலாக பட்டாசு கொழுத்தி நேற்றைய தினம் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றன.
இதன்போது ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் நாத்தப்பட்ட வன்முறகளையும் எதிர்ப்பு கோசங்களையும் தேசிய தவ்ஹீத் பள்ளிவாயல் மீதான தாக்குதல் மற்றும் அங்கு தொழுகைக்காக வந்திருந்தவர்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதல் போன்வற்றைக் கண்டித்து இன்று (22.08.2015) லுஹர் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாயல் முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டம் இடம் பெற்றதுடன் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவும் ஊட்டப்பட்டது.
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பொலிஸாரின் நீதி மன்ற அறிவுறுத்தல் மௌலவி ஸஹ்றான் அவர்களி;ன உரை அனைத்தும் இங்கு முழுமையாக ஒளி வடிவத்தில் இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக நீங்கள் பார்க்கலாம்















