நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் பேரவையின் திருமலை மாவட்ட இளைஞர் மாநாடு நேற்று (11.08.2015) மாலை மூதூர் சேப் ரெஸ்டுரன்ட் இல் சிறப்பாக நடைபெற்றது.
இளைஞர் பேரவையின் அமைப்பாளர் சகோ. நௌஷாத் மஹ்ரூபின் தலைமையிலும் செயற்குழு உறுப்பினர்களான சகோ. சப்ராஸ் நிஜாம் மற்றும் சகோ. ஜவாஸ் அவர்களின் நெறிப்படுத்தலிலும்
நடைபெற்ற இந்நிகழ்வில் திருமலை மாவட்ட வேட்பாளர் டாக்டர் சாஹிர், ந.தே.மு பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், ந.தே.மு கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மஸ்ஹூர், தலைமைத்துவ சபை உறுப்பினர் றிஸ்மி காஸிமி மற்றும் ந.தே.மு வின் இளைஞர் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களான சகொ. பாஹீம். ஹனீபா, சகோ.சுஹைல் , சகோ. சுக்ரி, சகோ.உபைதுல்லாஹ், சகோ.ரிசா, சகோ.இர்பான் ஆகியோர் கலந்து சிறப்பித்தினர்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )





