Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 4, 2015

avathani Media Network

NFGGயின் மற்றுமொரு பிரமாண்ட பிரச்சாரக் கூட்டம் முஹ்ஸின் மௌலான சதுக்கத்தில் இடம்பெற்றது -படங்கள்


(NFGG ஊடகப்பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மாபெரும் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று காத்தான்குடி முஹ்ஸின் மெளலானா சதுக்கத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் SMM. காசீம் அவர்களின் தலைமையில் NFGGயின் செயற்குழு உறுப்பினர் சகோ, முஹம்மத் பாயிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் NFGGயின் தவிசாளரும் SLMCயின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தெளஸ் (நளீமி), வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM.பழுலுல் ஹக் மௌலவி முஹம்மது றிஸ்மி (காசிமி), கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் SLMCயின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன், அதன் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களான மர்சூக் அஹமது லெப்பை, இல்மி அஹமது லெப்பை, ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர் கையூம் ஆசிரியர் உள்ளிட்ட கட்சிகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இப்பிரச்சாரப் கூட்டத்தின்போது ஏறாவூர், காத்தான்குடி, பூநொச்சிமுனை, காங்கேயனோடை, ஒல்லிக்குளம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சமூக, சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் SLMCயின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான இணைவினை மேடையில் வெளிப்படுத்தினர்.






































avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :