(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நேற்று மஞ்சந்தொடுவாய், ஹிழ்ளுரியா ஜும்ஆபள்ளி சந்தியில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் MIM.ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், பெண்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), அதன் தலைமைத்துவசபை உறுப்பினர் MM.பாளுலுல் ஹக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இதன்போது உரிய முறையில் தெரிவு செய்யப்படாத பிரதிநிதித்துவங்கள், கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதங்கள் தொடர்பில் விஷேட காணொளி காட்சிகளும் பொதுமக்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டன.