Featured Home (TOP)

Recent Comments

Monday, September 7, 2015

avathani Media Network

மட்டு-சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் 1 கோடி 20 இலட்சம் ரூபாய் செலவில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு-படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்,  எஸ்.எம்.எம். முஸ்தபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் இரண்டு மாடிக் கட்டடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

1978 ஆரம்பத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாந்த இப் பள்ளிவாயல் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் 1 கோடி 20 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி ஜூம்மா பள்ளிவாயலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 07-09-2015 இன்று திங்கட்கிழமை மாலை சிகரம் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் புதிதாக இரண்டு மாடிக் கட்டடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சிகரம் ஜூம்மா பள்ளிவாயலுக்கான அடிக்கல் உத்தியோகபூர்வமாக நடப்பட்டது.

குறித்த சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் 18வது பள்ளிவாயல் என ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தெரிவித்தார்.

இப் பள்ளிவாயலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் காத்தான்குடி காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உட்பட சம்மேளன உறுப்பினர்கள்,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி),முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களான அஷ்ஷெய்க் ஜூனைட் நளீமி,அஷ்ஷெய்க முனீர் நளீமி, சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் முன்னாள் தலைவர் எம்.வை.ஆதம் உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




























avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :