Featured Home (TOP)

Recent Comments

Monday, September 28, 2015

avathani Media Network

சேயா விவகாரத்தில் 17 வயது பாடசாலை மாணவனுக்கு அநீதி- பொலிசாரின் பொறுப்பற்ற செயற்பாடு இது என சாடுகிறார் முஜிபுர் ரஹ்மான்

5 வயது சிறுமி சேயாவின் கொலை விவ­கா­ரத்தில் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்ட 17 வயது பாட­சாலை மாண­வ­னுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது என தெரி­வித்­துள்ள பாரா­ளுன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் இது பொலி­ஸாரின் பொறுப்­பற்ற செயல் எனவும் குற்றம் சுமத்­தி­யுள்ளார். 

சில காமு­கர்­களின் இச்­சை­க­ளினால் சேயா அநி­யா­ய­மாக  கொல்­லப்­பட்­டமை பெரும் கொடிய செய­லாகும். அவ்­வாறே இவ்­வி­வ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட 17 வயது பாட­சாலை மாண­வ­னிடம் முழு­மை­யான விசா­ர­ணைகள் நிறை­வ­டை­வ­தற்குள் அவனை குற்­ற­வா­ளி­யாக காண்­பித்­த­மையினால் குறித்த மாண­வ­னுக்கும் அவ­னது குடும்­பத்­திற்கும் அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தமக்­கி­ருக்கும் அதி­கா­ரங்­களை துஷ் பிர­யோகம் செய்­கின்­றனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சுமத்­தினார்.

நேற்று கொழும்பில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்­றின்­போதே அவர் இந்த குற்­றச்­சாட்டை முன்­வைத்தார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில்,
கொட்­ட­தெ­னி­யா­வயின் சிறுமி சேயா பாலியல் வன்­பு­னர்­வுக்கு உட்­ப­டுத்தி கொலை செய்­த­மை­யா­னது எவ­ராலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும். இதற்கு அதி­க­பட்­ச­மாக மரண தண்­ட­ணையை வழங்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி நீதி­ய­மைச்­சுக்கு நாம் மகஜர் ஒன்றை கைய­ளித்­தி­ருக்­கிறோம். 

அவ்­வாறே குறித்த கொடூர கொலைச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­யவர் எனும் சந்­தே­கத்­தின்­பேரில் 17 வய­து­டைய மாணவன் ஒருவன் கைது செய்­யப்­பட்­டுள்ளனர்.

குற்­ற­மற்ற குறித்த மாண­வனின் மடிக்­க­ணி­னியில் நீலப்­ப­டங்கள் இருந்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். எனினும் குறித்த மாணவன் குற்­ற­மற்­றவன் என்­பது இப்­போ­தைக்கு தெளி­வா­கி­யி­ருக்­கி­றது. 

பொலி­சா­ருக்கு சந்­தே­கத்­தின்­பேரில் யாரையும் கைது செய்யும் அதி­காரம் இருக்­கி­றது. இதனை பயன்­ப­டுத்­தியே ஒரு அப்­பாவி மாணவன் கைது செய்­யப்­பட்டார். குறித்­த­மா­ணவன் கைது செய்­யப்­பட்­டமை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்பில் ஊட­கங்­களில் செய்­திகள் வெ ளியா­கின.

பொலிஸார் பொறுப்­பற்ற முறை­யி­லேயே உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத அந்த செய்­தியை வெ ளியிட்­டனர். இது பொறுப்­பற்ற செய­லாகும்.

பொலி­ஸாரின் இந்­ந­ட­வ­டிக்­கை­யினால் குறித்த மாணவன் அப­கீர்த்­திக்­குள்­ளா­கி­யுள்ளான். குறித்த மாண­வனின் மானம் குழி­தோண்டி புதைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அவ­னது குடும்­பத்­திற்கும் இழுக்கு ஏற்­பட்­டுள்­ளது. இதனை பொலிஸார் பொறுப்­பேற்க வேண்டும். 

சேயா­விற்கு அநி­யா­ய­மி­ழைக்­கப்­பட்­டது போன்று குறித்த மாண­வ­னுக்கும் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.

அம் மாண­வ­னுக்கும் அவ­னது குடும்­பத்­தா­ருக்கும் மான நஷ்­ட­ஈடு வழங்க வேண்டும் .

அத்தோடு இதனோடு தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் போது மிகக்கவனமாக நடந்து கொள்ளவேண்டும். பொலிஸ் சட்டங்கள் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :