Featured Home (TOP)

Recent Comments

Monday, September 14, 2015

avathani Media Network

இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சரும் - அரசியலமைப்பின் 19ம் திருத்தச் சட்டத்தின் படியான அதிகாரங்களும் வேறுபாடுகளும்.

(பல வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது பிரசுரிக்கப்படுகிறது)

இராஜாங்க அமைச்சர் என்பவர் அமைச்சரவை(கபினட்) உறுப்பினர் அல்லாத அமைச்சராவார். அரசியலமைப்பின் உறுப்பரை 44(1) இராஜாங்க அமைச்சரை இவ்வாறே வரையறை செய்கிறது. பிரதியமைச்சர் என்பவர் கபினட் அமைச்சருக்கு உதவியாக/பதிலாக நியமிக்கப்படும் அமைச்சராவார். (உறுப்பரை 45(1)). பிரதியமைச்சர் கபினட் உறுப்பினர் அல்லாத அமைச்சர் என அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை. ஆயின் பிரதியமைச்சர் ஒருவர் கபினட் அமைச்சருக்கு பதிலாக அல்லது அவர் இல்லாத போது கபினட் கூட்டங்களில் பங்குபற்ற முடியும். ஆனால் இராஜாங்க அமைச்சருக்கு கபினட் அந்தஸ்து இல்லை.

பிரதியமைச்சர் தனக்கு தனியாக செய்வதெற்கென தனது கபினட் அமைச்சரால் குறித்தொதுக்கப்பட்ட கடமைகள் உட்பட தனது கபினட் அமைச்சரின் சகல விடயங்களிலும் அவருக்கு உதவி செய்ய முடியும் என்பதுடன் கபினட் அமைச்சர் சார்பில் செயற்படவும் முடியும். ஆனால் இராஜாங்க அமைச்சர் தனக்கு தனது கபினட் அமச்சர் மூலம் செய்வதற்கு குறித்தொதுக்கப்பட்ட கடமைகளை மாத்திரமே செய்யமுடியும். (உறுப்பரை 44(5)). கபினட் அமைச்சரின் ஏனைய விடயங்களில் இராஜாங்க அமைச்சர் தலையிட முடியாது.மேலும் என்னென்ன விடயங்கள் இராஜாங்க அமைச்சருக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பதை கபின்ட் அமைச்சரே தீர்மானிப்பார்.
இரண்டு அமைச்சர்களும் என்னென்ன அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி பிரதமரின் ஆலோசணையுன் தீர்மானிப்பார். (உறுப்பரைகள் 45(2), 44(1))
இராஜாங்க அமைச்சர் தான் நிறைவேற்றிய கடமைகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் முழு அமைச்சரவைக்கும்(கபினட்) பொறுப்புக்கூற வேண்டும். (உறுப்பரை 44(4)). ஆனால் பிரதியமைச்சரின் கடமைகளுக்கு கபினட் அமைச்சரே பாராளுமன்றில் பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சரவைக்கு பொறுப்பக்கூறும் கடப்பாடு இல்லை. கபினட் அமைச்சர் இல்லாத போது அவர் சார்பில் பிரதியமைச்சர் பாராளுமன்றில் பொறுப்புக்கூற வேண்டும்.
அமைச்சரவைப் பத்திரங்களை தயாரிக்கும் பொறுப்பு கபினட் அமைச்சருக்கே உரியது. இதில் இராஜாங்க அமைச்சர் தலையிட முடியாது. ஆனால் பிரதியமைச்சர் தனது கபினட் அமைச்சருக்கு அவற்றை தயாரிப்பதில் உதவி செய்ய முடியும்.
ஜனாதிபதி தான் விரும்பும் நேரத்தில் இராஜாங்க அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சை மாற்ற முடியும் (உறுப்புரை 44(3)). பிரதியமைச்சர் தொடர்பில் இவ்வாறான ஏற்பாடு எதுவும் அரசியலமைப்பில் இல்லை.
எனவே இராஜாங்க அமைச்சர் என்பவர் அதிகாரத்திலும் கடமையிலும் பிரதியமைச்சருக்கு அடுத்தபடியான நிலையிலே தான் செயற்படுகிறார்.

Mohame Rizvy யின் முகநூலில் இருந்து...

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :