Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 8, 2015

avathani Media Network

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 ஆண்டு  ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக  மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு 15வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது 2015ம் ஆண்டு பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும், அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு 11-13வயதிற்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்த தற்பொழுது 2015ம் ஆண்டு பாடசாலையில் குறைந்தது 6ம் ஆண்டில் கல்வி கற்பவர்கள் ஆகியார் 31-10-2015 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் போது கட்டாயமாக விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர், வயது, கல்வித் தரம், சேரவிரும்பும் பகுதி விலாசம், தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை -அதிபர்,இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி, த. பெ. இல: 105,இல.50, ஹிரிம்புர குறுக்கு வீதி, காலி என்ற முகவரிக்கு  அனுப்பிவைக்க முடியும்.

அல்லது தொ.பே.இல. : 0912243672 , 077 7921418தொ.நகல்: 0912222037 ஈமெயில்:  ibnuabbas.galle@gmail.comமுகவரிக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) மேலும் தெரிவித்தார்.

அத்தோடு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இன்ஷா அல்லாஹ் நேர்முகப் பரீட்சை நவம்பர் மாத பிற்பகுதியில் நடைபெறும்.


குறிப்பு இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கும் ,அரசாங்கத்தின் அல்-ஆலிம் சான்றிதழ் பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :