கொழும்பிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் 34 வீடுகள் டெங்கு நோயைப் பரப்பும் வகையிலான சூழலைக் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2,292 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் படி இவ்வாறு நுளம்புகள் பெருகும் சூழலைக் கொண்ட வீடுகள் அவதானிக்கப்பட்டதாக, கொழும்பு மாநகரசபையின், தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்நிலை இன்னும் மோசமடையலாம் என்பதால் பொதுமக்கள் தங்களது வீட்டுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
