Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 9, 2015

avathani Media Network

கல்கமுவயில் ஐந்து ஆண்டுகளில் காட்டு யானை தாக்குதல்களினால் 32 பேர் பலி

கல்கமுவ வனவிலங்கு பரிபாலன வலயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காட்டு யானை தாக்குதல்களினால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 35 காட்டு யானைளும் உயரிழந்துள்ளதாக கல்கமுவ வனவிலங்கு வலயத்தின் அதிகாரி ஐ. எம். ஜீ செனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த எட்டு மாதங்களில் மனித உயிரிழப்புகளும் அதேபோல மனிதர்களினால் நான்கு காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளன.
குறித்த காலப்பகுதியில் 55 வீடுகள் காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் தாக்குதல் குழியில் விழுதல், துப்பாக்கி சூடு போன்ற காரணங்களினால கல்கமுவ, எஹெட்டுவௌ, மாஹோ மற்றும் அம்பன்பொல ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
மேலும் 2014 ஆம் ஆண்டு 7 காட்டு யானைகளும், ஒரு நபரும் உயிர் இழந்துள்ளதுடன் 80 வீடுகள் காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :