மட்டக்களப்பில் கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்காகத் தமது இளமைக்
காலத்தைப் பயன்படுத்தித் தற்போது ஓய்வு நிலையில் வாழும் மூத்த
கால்பந்தாட்ட வீரர்களுக்கு கெளரவம் அளிக்கும் வகையில் முதியோர் தின
ஏற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின்
நிருவாகத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அதனடிப்படையில் நாளயதினம் (01.10.2015)ம் திகதி மாலை 3:00 – 6:00 மணி
வரைக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இந்நிகழ்வுகள்
இடம்பெறவுள்ளன.
மூத்த கால்பந்தாட்ட வீரர்களையும், அதிதிகளையும் வரவேற்றல், மூத்த
வீரர்கள் பங்குபற்றும் கண்காட்சிப் போட்டி, மூத்த வீரர்களை கெளரவித்தல்
போன்ற நிகழ்ச்சி நிரலுக்கமைய இக்கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
இக்கொண்டாட்டத்தில் பங்குபற்றி மூத்த கால்பந்து வீரர்களைக் கௌரவிக்க
கால்பந்து அபிமானிகளை மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தினர் அன்புடன்
அழைக்கின்றார்கள்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
