கம்பஹா – கொட்டதெனியாவை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதோடு, அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
