Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 3, 2015

avathani Media Network

பாடசாலை மாணவர்கள்; தரம் ஒன்று அனுமதியும் பெற்றோர் கவலையும்.

-ஏ.எல்.டீன்பைரூஸ்-

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட பல ஊட்டற் பிரதேச எல்லைக்குள் வதியும் மாணவர்களின் பாடசாலை தரம் ஒன்று அனுமதி விடயத்தில் பல்வேறுபட்ட பிரச்சிசினைகள் காணப்படுவதாக பல முறைப்பாடுகளை, கவலைகளை பொற்றோர் சமூகம் தெரிவித்திருந்த போதிலும் அவற்றிக்கான ஒரு நிரந்தர் தீர்வு இல்லாது இருந்த வேளையில் தற்போது மட்டக்களப்பு மத்தி வலயம் வலயக்கல்வி பணிப்பாளர் ஊடாக  தீர்வு கிடைக்கப்பெற்று இருப்பது பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

2016 ம் ஆண்டில் தரம் 1ற்கான மாணவர் அனுமதி விடயத்தில் ஒரு பாடசாலையின் அதிபர் தங்களது பாடசாலைக்குறிய  ஊட்ட பிரதேச எல்லைக்குள் வதியும் மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கல்விப்பணிப்பாளரின் இறுக்கமான அறிவித்தலின் முலம் தங்களுக்கு ஏற்படவிருந்த  மாணர்கள் ஆட்சேர்ப்பு விடயத்திலான பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு நல்லாட்சியில் தீர்வு கிடைத்திருப்பதாக பெற்றோர்கள் தங்கள் மகிழ்சியினை தெரிவித்தனர்.

ஒரு மாணவன் தனது ஊட்டப்பிரதேச எல்லை பாடசாலையில் மாத்திரம் சேர்ந்து எதிர்கால கல்வியினை கற்க வேண்டுமே தவிர அப்பாடசாலையில் அதிபர் அனுமதிக்கிறார் இல்லை என்பதற்காக வேறு பாடசாலைகளுக்கு சென்று தனது பிள்ளையினை சேர்ப்பதற்கு எந்த பெற்றோரும் அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனது மஹல்லாவில் அல்லது தங்களது ஊட்டப்பிரதேச எல்லைக்குல் உள்ள பாடசாலைகளில் தங்களது மாணவர்களை சேர்ப்பதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் தங்களது பிரதேச கல்வி அலுவலகம் , வலயக்கல்வி  அலுவலகம் ஊடாக தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும்   பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.


மேற்படி விதி முறைகளை மீறி செயற்படும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற் கொள்ளவும் மட்டக்களப்பு மத்தி வலயம் தயாராக இருப்பதாகவும் அறியமுடிகின்றது.  

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :