Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 23, 2015

avathani Media Network

தொகு­தி­ முறையிலேயே உள்­ளூ­ராட்சி தேர்தல்; அமைச்­ச­ர­வையில் தீர்­மானம்!

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை தொகுதி மற்றும் விகி­தா­சார முறை­மை யில் அமைந்த புதிய தேர்தல் முறை­மையில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­ட­த்தின்­போதே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் புதிய தேர்தல் முறை­மைக்கு அமைய எல்லை நிர்­ணய செயற்­பா­டு­களில் ஏதா­வது அநீ­திகள் ஏற்­பட்­டுள்­ள­னவா என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு அமைச்­ச­ரவை உப­குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் எந்த முறை­மையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை நடத்­து­வது என்­பது தொடர்பில் கேள்வி எழுந்­துள்ள
நிலை­யி­லேயே புதிய முறை­மையில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னம்­எ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லை­யி­லேயே புதிய முறை­மையில் நடத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது. மேலும் எல்லை நிர்­ணய செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப குழுவில் பைசர் முஸ்­தபா கபீர் ஹஷீம் ரவூப் ஹக்கீம் மனோ கணேசன் துமிந்த திசா­நா­யக்க உள்­ளிட்ட அமைச்­சர்கள் இடம்­பெற்­றுள்­ளனர்.
நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்தில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தற்­போது நடை­மு­றையில் உள்ள விகி­தா­சார தேர்தல் முறை­மையில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அதே தினத்தில் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லா­னது புதிய தேர்தல் முறைப்­படி நடத்­தப்­ப­ட­வேண்டும் என தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இறு­தியில் தற்­போது புதிய முறையில் தேர்­தலை நடத்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :