(எஸ்.எம்.எம். முஸ்தபா)
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு இன்று 09.09.2015 ஆந் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டதையொட்டி காத்தான்குடியில் முஹைதீன் மெத்தைபெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் அஸர் தொழுகையின் பின் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் சிரேஷ;ட உபதலைவர் மௌலவி எச்.எம். ஸாஜஹான் பலாஹி தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது. மௌலவி ஸாஜஹான் பலாஹி ஆற்றிய உரையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு அல்லாஹ் கொடுத்த மாபெரும் அருட்கொடையாகும். இதனை நாம் நன்றியுணர்வோடு அல்லாஹ்வுக்கு ஸூக்ர் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.
இதில் எமதூரில் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியவர்கள் இதன் முலம் பயன்பெறும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அஷ;nஷய்ஹ் மும்தாஸ் மதனியின் தொலைபேசி ஊடாக ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து அமைதியான முறையில் மகிழ்ச்சியை அனுஷ;டிக்குமாறு அறிவுரை கூறினார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் அவர்களுடன் சார்ந்தவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. விசேட துஆ பிரார்த்தனையை மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி நிகழ்த்தினார்கள்.
இதில் சம்மேளன பிரதித் தலைவர் ஏ.எல். அப்துல் ஜவாத் முன்னாள் தவிசாளர் எஸ்எச்.எம். அஸ்பர் மற்றும் அமீன் மௌலவி ஹாலித் ஹஸன் மௌலவி உட்பட உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆதரவாளர்களினால் இவ்வைபதில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்களுக்கு அப்பிள் தோடம் பேரீத்தம் பழங்கள் இனிப்புப் பண்டங்கள் என்பன வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறுவர்கள் வீதியில் பயணித்தவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கினர்.