(எஸ்.எம்.எம். முஸ்தபா)
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கோட்டத்தில் உள்ள ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி செயலமர்வு (Kids Athlettics Programme Workshop)
காத்தான்குடி அன்வர் வித்தியாலய மைதானத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ. பதுர்தீன் தலைமையில் நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை மட்டத்தினாலான விளையாட்டுப் போட்டி நவீனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் நடாத்தப்படவுள்ளது. இதற்கான பயிற்சிகள் செயலமர்வுகள் பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடாத்தப்பட்டுள்ளதுடன் அதிபர்களுக்கு வழிகாட்டி நூல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். நஸீர் தெரிவித்தார்.
இப்பயிற்சி செயலமர்வில் மாணவர்களுக்கான வழிகாட்டல் வளவாளராக கல்வி அமைச்சின் மெய்வல்லுனர் இணைப்பாளர் எஸ்.எல்.எச்.எம். இனாமுல்லாஹ் மற்றும் சிறியோர் விளையாட்டு உதவிக் கல்விப் பணிப்பாளர் மௌலவி எம்.எச்.எம். முபாறக் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.
மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் இஸ்ஸதீன் சேர் ஆரம்பக் கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஐ.எம். இப்றாஹீம் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.
இப்பயிற்சி செயலமர்வில் 100 மாணவர் அளவில் கலந்து கொண்டனர்.