மட்டக்களப்பு—ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரம்புக்கூடை விற்பனை செய்யும் இருவருக்கிடையில் மதுபோதையில் ஏற்பட்ட முறுகல் நிலையின்போது ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது 36 வயதுடைய கோணேஸ்வரன் ரமேஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Source - kathiravan.com
