Featured Home (TOP)

Recent Comments

Sunday, September 27, 2015

avathani Media Network

மட்­டக்­க­ளப்பு–கொழும்பு ரயில் சேவையில் மாற்றம்

ஒக்­டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் மட்­டக்­க­ளப்­புக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான புகை­யி­ரத சேவை­களில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பிரதி புகை­யி­ரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலிபா தெரி­வித்தார். புகை­யி­ரத திணைக்­கள துணை இயக்க அத்­தி­யட்­சரின் 585 சீ இலக்க சுற்று நிரு­பத்­துக்கு அமைய இந்த மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய மட்­டக்­க­ளப்பில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்­படும் உத­ய­தேவி புகை­யி­ரதம் காலை 6.10 க்கு புறப்­பட்டு பிற்­பகல் 3.15க்கு கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும். மாலை 5.30 க்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து புறப்­படும் புகை­யி­ரதம் 5.20 க்கு புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 3.30 க்கு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும்.
இரவு 8.30 க்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து கொழும்­புக்கு புறப்­படும் பாடும் மீன் நகர்சேர் கடு­கதி புகை­யி­ரதம் இரவு 8.15 க்கு புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 4.53 க்கு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும். இதே­வேளை காலை 10.30 மணிக்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து மாகோ சந்தி வரை செல்லும் புகை­யி­ரதம் 12 ஆம் திகதி முதல் 10.15 க்கு புறப்­பட்டு மாலை 5.30 மணிக்கு மாகோ சந்­தியை சென்­ற­டையும்.
மேலும் கொழும்பில் இருந்து மாலை 7. 15 க்கு மட்­டக்­க­ளப்­புக்கு புறப்­படும் பாடும் மீன் நகர்சேர் கடு­கதி புகை­யி­ரதம் மாலை 7.00 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 3.55 க்கு மட்­டக்­க­ளப்பை சென்­ற­டையும். கொழும்பில் இருந்து காலை 7.15 க்கு புறப்­படும் உத­ய­தேவி புகை­யி­ரதம் காலை 6.05 மணிக்கு புறப்­பட்டு பிற்­பகல் 2.45 க்கு மட்­டக்­க­ளப்பை சென்­ற­டையும். இரவு 9.45 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்­படும் புகை­யி­ரதம் 9.30 க்கு புறப்­பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு மட்­டக்­க­ளப்பைச் சென்­ற­டையும்.
இந்த நேர மாற்றம் அக்­டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் அமுல்­ப­டுத்­தப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒரு வருடத்துக்கு முன்னர் 2014 அக்டோபர் மாதத்திலும் மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :