(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக் கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நல்லாசி வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை இன்று 9 புதன்கிழமை இடம்பெற்றது.
இதன் போது மேற்படி விஷேட துஆப் பிரார்த்தனையை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) நடாத்தி வைத்தார்.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட துஆப் பிரார்த்தனையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் , ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள், உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள்,பொ து மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.