Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 10, 2015

avathani Media Network

தேசிய அரசாங்கத்தில் மட்டு. மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இராஜாங்க அமைச்சராகவும் ஒருவர் பிரதியமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் -படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இராஜாங்க அமைச்சராகவும் ஒருவர் பிரதியமைச்சராகவும் 09-09-2015 நேற்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிராமப்புற பொருளாதார பிரதியமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :