Featured Home (TOP)

Recent Comments

Sunday, September 13, 2015

avathani Media Network

பிரதமர் ரணில் நாளை இந்தியா விஜயம்

இந்தியாவுக்கான விஜயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் அங்கு இருக்கவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இருவருக்கும் இடையில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பாலம் அமைத்தல், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இலங்கை மற்றும் இந்திய பிரதமர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
இதேவேளை இந்தியா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களுக்கான மீன்பிடி அனுமதியை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக மீனவர்கள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :