Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 23, 2015

avathani Media Network

எனது மனைவியுடன் அசாத் சாலி சட்டவிரோத வாழ்க்கை நடத்துகிறார் : உவைஸ்

அடைக்கலமே கொடுத்தேன் என்கிறார் அசாத் சாலி

தான் முஸ்­லிம்­களின் தலைவர் எனக் கூறிக் கொண்டு எனது மனை­வியை அழைத்துச் சென்று சட்­ட­வி­ரோ­த­மான வாழ்க்கை நடாத்தும் அசாத்­சாலி முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் கேவ­லப்­ப­டுத்­தி­யுள்ளார்.

நானும் எனது பிள்­ளை­களும் பாதிக்­கப்­பட்டு துன்­பப்­ப­டு­வது போன்று வேறு எவரும் இதன் பிறகு அசாத்­சா­லி­யினால் பாதிக்­கப்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே எனது கதையை ஊட­கங்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­து­கிறேன் என மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரி­வித்தார்.

அசாத் ­சா­லியின் நாவல வீட்டில் எனது மனைவி இருப்­ப­தாக தகவல் கிடைத்­ததும் அங்கு சென்று வீட்டைச் சுற்றி வளைத்த எம்மை, அமைச்சு பாது­காப்பு பிரிவைச் சேர்ந்த இரு உத்­தி­யோ­கத்­தர்கள் விரட்­டி­னார்கள்.

அசாத் ­சா­லிக்கு ஆயு­த­மொன்றும் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஒரு மாகாண சபை உறுப்­பி­னருக்கு அர­சாங்கம் எவ்­வாறு அமைச்சுப் பாது­காப்பு பிரிவு மூலம் பாது­காப்பு வழங்க முடியும் எனவும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

மத்­திய மாகாண சபையின் உறுப்­பினர் எ.எல்.எம். உவைஸின் மனைவி ருஸ்­தாவை (வயது 46) மத்­திய மாகாண சபையின் உறுப்­பினரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அசாத் ­சாலி அழைத்துச் சென்று வாழ்க்கை நடாத்தி வரு­வதை விளக்கும் முக­மாக உவை­ஸினால் பம்­ப­லப்­பிட்டி சிட்டி ஹோட்­டலில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அம் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்­க­ம­ளிக்­கை­யிலே ஏ.எல்.எம்.உவைஸ் மேற்­கொண்­ட­வாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில் ‘எனது மனைவியை இந்­தி­யா­வுக்கும் அழைத்து சென்­றுள்ளார். எனது மனைவி  இருக்கும் இடத்தை இனங்­காண முடி­யா­ம­லி­ருந்­ததால் ஏதும் நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­தி­ருந்தேன்.

இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த சனிக்­கி­ழ­மையே இலங்­கைக்கு வந்­துள்ளார்.

எனது மனைவி சில தினங்­க­ளுக்கு முன்பு எனது மக­னுக்கு தொலை­பே­சி­யி­னூ­டாக கதைத்­துள்ளார்.

அதில் தான் அசாத் சாலியால் பல­வந்­த­மாக கூட்டி வரப்பட்டிப்­ப­தா­கவும் வீட்­டுக்கு வர வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­தி­ருக்­கிறார். இரவு ஒரு மணிக்கு ஒரு புதிய தொலை­பேசி இலக்­கத்­திலிருந்தே தொடர்பு கொண்­டுள்ளார். 

அசாத்­சா­லியின் மனை­வியும் மக­ளுமே எனது மனைவி அசாத்­சா­லியின் நாவல வீட்டில் இருப்­ப­தாக எனக்கு அறி­வித்­தார்கள். இத­னை­ய­டுத்தே நாம் நாவல வீட்­டுக்குச் சென்றோம்.

அசாத் ­சாலி இதற்கு முன்பு பல திரு­ம­ணங்கள் செய்­துள்ளார். பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ரையும் திரு­மணம் செய்து விவா­க­ரத்துச் செய்­துள்ளார். இவர் பிர­பல அர­சியல்வாதி­க­ளு­ட­னி­ருந்து போட்­டோக்கள் எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு தனக்கு அர­சியல் பலம் இருப்­ப­தாக ஏமாற்றி வரு­கிறார்.

பெண்­களை ஏமாற்றி கூட்டிச் சென்று ஹரா­மான வாழ்க்கை நடாத்தும் இவ­ரது கேவ­ல­மான நட­வ­டிக்கை நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

இவ­ருக்கு தேசி­யப்­பட்­டி­யலில் இடம் வழங்­கா­ம­லி­ருந்­த­தற்கு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் நன்றி செலுத்த வேண்டும்.

அசாத் ­சா­லி­யையும் எனது மனை­வி­யையும் வெலி­க்கடை பொலி­ஸுக்கு அழைத்து வந்து விசா­ரணை நடாத்­து­வ­தாக கூறிய பொலிஸார் எனது மனை­வியை மாத்­திரம் அழைத்து வந்து வாக்­கு­மூலம் பெற்­றுள்­ளனர். அசாத்­சாலி விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. இவ­ருக்கு அர­சியல் பின்­பு­லத்தில் ஆத­ரவு இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரா­க­வி­ருந்ததனால் கடந்த இரு வரு­டங்­க­ளாக எனக்கும் அசாத்­சா­லிக்கும் தொடர்­பி­ருந்­தது. எனது மனை­வியும் அசாத்­சா­லியின் மனை­வியும் இதன் மூலம் நண்­பி­க­ளா­னார்கள். இந்தக் காலத்­திலே எனது மனை­விக்கும் அசாத்­சா­லிக்கும் தொடர்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

என்­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்து பெற்றுக் கொள்­ளாத எனது மனை­வி­யுடன் அசாத் சாலி குடும்பம் நடாத்­து­வது இஸ்­லாத்­துக்கு முர­ணா­ன­தாகும். ஹரா­மாகும். சவு­தியில் என்றால் இரு­வரும் சிரச்­சேதம் செய்­யப்­ப­டு­வார்கள்.

தான் ஒரு சமூ­கத்தின் தலைவன் என்று கூறி கொண்டு இவ்­வா­றான கீழ்த்­த­ன­மான செயல்­களில் ஈடு­படும் அவரை சமூகம் நிரா­க­ரிக்க வேண்டும்.

இவர் அர­சி­ய­லுக்கே தேவை­யற்­றவர்.   இதன் பிறகு அசாத்­சா­லி­யினால் எனக்கும் எனது குடும்­பத்­துக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­படும். எமக்கு ஏதும் நடந்தால் அசாத்­சா­லியே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும். 

நாட்டு மக்­க­ளுக்கும் முஸ்லிம்களுக்கும் அசாத்சாலியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மேலும் பல ஊடக மாநாடுகளை நடாத்தி வெளிச்சத்துக்கு கொண்டு வரவுள்ளேன். 

 ஒரு உண்மையான முஸ்லிம் செய்யும் வேலை அல்ல இது. இவரது இந்த மோசமான செயல்களை முடிவுக்கு கொண்டு வர சமூகம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். உவைஸின் மகனும் இங்கு கருத்துத் தெரிவித்தார். 

மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஏ.எல்.எம். உவைஸின் மனை­விக்கும் அவ­ருக்கும் இடையில் பல மாதங்­க­ளாக பிரச்­சினை இருந்­துள்­ளது.

அவ­ருடன் வாழ முடி­யாது என்று அவரது மனைவி கடி­தமும் எழு­தி­யுள்ளார்.

மனை­வியை உவைஸ் லண்­ட­னுக்கும் அழைத்துச் சென்று வைத்­தி­ருந்தார். அங்கும் சிறையில் போன்றே அடைத்து வைத்­தி­ருந்­தார்கள்.

அங்­கி­ருந்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்தும் அவர்­க­ளது குடும்­பப்­பி­ரச்­சினை தீர­வில்லை.

தனது கண­வ­னுடன் வாழ­மு­டி­யாது தினமும் பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது என நுகே­கொடை பொலிஸில் மகளிர் பிரிவில் முறைப்­பாடும் செய்­துள்ளார். இக்­கா­லங்­களில் இவர் தெஹி­வளைப் பகு­தியில் தனது உற­வி­னர்கள் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருந்­துள்ளார்.

ஐந்து தினங்­க­ளுக்கு முன்பே உவைஸின் மனைவி அடைக்­கலம் கோரி எனது நாவல வீட்­டுக்கு வந்­தி­ருந்தார். நான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தேன். இத­னை­ய­டுத்து உவைஸின் அடி­யாட்கள் எனது நாவல வீட்­டினை சுற்­றி­வ­ளைத்­தார்கள். நான் உங்கள் முகத்தில் கூட விழிக்க விரும்­ப­வில்லை என உவைஸின் மனைவி கூறி­விட்டார்.

அவரது மனை­வியை 45 தினங்­க­ளாக நான் வைத்­தி­ருந்­த­தாகக் கூறு­வ­தெல்லாம்  பொய். அவர் எனது வீட்­டுக்கு பணம் எடுத்து வர­வில்லை. பொலிஸில் ஏற்­க­னவே முறைப்­பாடு செய்து விட்டே வந்தார்.

எனக்கு அமைச்சு பாது­காப்பு பிரிவு உத்­தி­யோ­கத்­தர்கள் பாது­காப்பு வழங்­கி­வ­ரு­வது உண்மை. 2001ஆம் ஆண்­டி­லி­ருந்து பாது­காப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள், கொலைப் பய­மு­றுத்­தல்கள் இருப்­ப­த­னாலே இந்­தப்­பா­து­காப்பு வழங்­கப்­ப­டு­கி­றது.உவைஸின் மனைவி விவ­கா­ரத்துக் கோரி கொழும்பு காதி நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­தி­ருக்­கிறார்.

இரண்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளன.

தான் எட்டு வருடங்களாக கணவருடன் தொடர்புகள் இல்லாமல் இருப்பதாக காதி நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அசாத் சாலி கூறினார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :