சமூகவலைத்தளமான முகநூல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும், செப்டெம்பர் மாத இறுதிவரை 2000ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் கணனி அவசர தயார்நிலை இணைப்பு நிலையத்தின் சிரேஷ்ட
தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளில் 80 வீதமானவை வேறு நபர்களின் பெயரில் போலியான கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ் வாறு போலியான கணக்குகள் தொடர் பில் முக நூல்களில்கணக்குகளைக் கொண்டிருக்காதவர்கள் கூட பேஸ்புக் நிறுவனத்துக்கு குறித்த போலிக் கணக்குத் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இது மாத்திரமன்றி வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் முக நூல்களில் பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் கணிசமான முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நேரடியாக பேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப் படுத்தினால் அவர்கள் அந்தப் படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார் கள் என்றும் அவர் மேலும் குறிப் பிட்டார்.
