Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 20, 2015

avathani Media Network

பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை மாணவர்களின் கல்விச்சுற்றுலா 2015

(எம்.எஸ்.எம். நுஸ்ரி)
எமது பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை மாணவர்களின் கல்விச்சுற்றுலா கடந்த 18.10.2015ஞாயிற்றுக்கிழமை மு.ப. 05.00 மணிக்கு சுபஹ் தொழுகையுடன் ஆரம்பமானது. ஒருநாள்  நேரசூசியைக் கொண்ட எமது கல்விச்சுற்றுலா காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி கதுருவளை, ஹபரணை, அக்குரணை ஊடாக கண்டியை வந்தடைந்தது.


      எமது பாடசாலை மாணவ மாணவிகள்   நூற்றி  ஏழு பேர் இதில் கலந்துகொண்டதோடு பிஸ்மி குழுமத்தின் தவிசாளர்பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் பணிப்பாளர்உட்பட ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இக்கல்விச்சுற்றுலாவில் எமது பாடசாலை மாணவ மாணவிகள் பேராதனை பல்கலைக்கழகம், பேராதனை தாவரவியல் பூங்கா, கண்டி தலதா மாளிகை, தெப்பக்குளம், கண்டி சிற்றி சென்டர் பேரங்காடி ஆகிய முக்கிய இடங்களை பார்வையிட்டதுடன் பல்வேறு விடயங்களையும் அறிந்து கொண்டனர். அத்தோடு செல்லும் வழியில் பராக்கிரம சமுத்திரத்தினையும் பார்வையிட்டனர். அத்துடன் சுற்றுலாவின் விசேட அம்சமாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலநிலை மாற்றம் சம்பந்தமான கண்காட்சி ஒன்றையும் பார்வையிட்டனர். மேலும் மாணவ மாணவிகள் அனைவரும் தெப்பக் குளத்தில் படகுச் சவாரியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

      இறுதியாக 19.08.2015 திங்கள் அதிகாலை ௦2.30 மணியளவில் மாணவர்கள் பாடசாலை வந்து சேர்ந்தனர்.











11 Attachments

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :