Featured Home (TOP)

Recent Comments

Friday, October 16, 2015

avathani Media Network

2016 நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் 23இல் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதோடு வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 20ம் திகதி இடம் பெறவுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை நவம்பர் 20 ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் மேற்கொள்ளப் படவுள்ளது. அன்று முதல் 14 தினங்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 ஆம் திகதி நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது.
குழுநிலை விவாதம் டிசம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 12 தினங்கள் வரை இடம்பெறும்.
டிசம்பர் 22 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்த அமைச்சவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பதில் நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் சமர்ப்பிக்கப் பட்டது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :