சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பண்டாரவளை அம்பிட்டிகந்த பெருந்தோட்டத்தில் 67 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்கிழமை அங்கி
ருந்து வெளியேற்றப்பட்டு அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ருந்து வெளியேற்றப்பட்டு அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தோட்டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தோட்டத் தொழிலாளர்களை வெளியேறுமாறு பிரதேச செயலாளர் உத்தரவிட்டும் அவ் உத்தரவினை தொழிலாளர்கள் செவிமடுக்கவில்லை. அதையடுத்து பொலிஸாரின் துணையுடன் தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுப் பதுளை மாவட்டப் பணியகம் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், ஹப்புத்தளைப் பகுதியின் உடவேறியா தோட்டத்தின் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
