Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 6, 2015

avathani Media Network

மட்டு.மாவட்­டத்தில் 25 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு மின்­வ­ச­தி­யில்லை

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சுமார் 25 ஆயிரம் குடும்­பங்கள் மின்­சார வச­தி­யற்று இருப்­ப­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட திட்­ட­மிடல் பணிப்­பாளர் ஆர்.நெடுஞ்­செ­ழியன் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள 14 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்பின் பிர­காரம் இந்த விவ­ரங்கள் தெரி­ய­வந்­துள்­ளன.
இவற்றுள் 2466 வீடுகள் மின்­சார வசதி கிடைப்­ப­தற்­கான மின் விநி­யோக மார்க்­கங்கள் அற்ற இடங்­களில் உள்­ளன. மேலும் 22482 வீடுகள் மின்­வி­நி­யோகம் உள்ள பகு­தி­களில் இருந்த போதும் வறுமை கார­ண­மாக அவர்கள் வீட்டில் மின் இணைப்பைப் பெற்றுக் கொள்­ள­வில்லை.
இந்தக் கணக்­கெ­டுப்­பின்­படி ஆகக் கூடு­த­லாக கோற­ளைப்­பற்று வடக்கு வாகரை பிர­தேச செய­லாளர் பிரிவில் 4270 குடும்­பங்­களும், ஏறாவூர்ப் பற்று செங்­க­லடி பிர­தேச செய­லாளர் பிரிவில் 4157 குடும்­பங்­களும் கோறளைப் பற்று தெற்கு கிரான் பிர­தேச செய­லாளர் பிரிவில் 3432 குடும்­பங்­களும், மண்­முனை மேற்கு வவு­ண­தீவுப் பிர­தேச செய­லாளர் பிரிவில் 3039 குடும்­பங்­களும், போர­தீவுப் பற்று வெல்­லா­வெளிப் பிர­தேச செய­லாளர் பிரிவில் 2562 குடும்­பங்­களும் மின்சார வசதியற்று வாழ்கின்றன. இக்குடும்பங்கள் மண்ணெண்ணெய் மற்றும் விறகை நம்பியே காலங்கழிக்கிறார்கள்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :