Featured Home (TOP)

Recent Comments

Monday, October 19, 2015

avathani Media Network

புலி­க­ளுக்கு உதவி புரிந்த 424 பேர் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்


1976 ஆம் ஆண்டு முத­லாக விடு­த­லைப்­பு­லி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அழி­வுகள், குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்டும். அத்­துடன் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ உதவி புரிந்த 424 பேர் தொடர்­பிலும் விசா­ரணை நடத்த வேண்டும் என பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு ஒன்றை கைய­ளித்த­தாக புத்­தி­ஜீ­வி­களின் குரல் அமைப்பு தெரி­வித்­தது.

கொழும்பில் வியா­ழக்­கி­ழமை அவ்­வ­மைப்பு நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அதன் இணைச்­செ­ய­லாளர் சட்­டத்­த­ரணி தினேஷ் தொடம்­கொட இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

கடந்த 1976ஆம் ஆண்டு முதல் விடு­த­லைப்­பு­லி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள், கொலைகள் மற்றும் அழி­வுகள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பா­டொன்றை கைய­ளித்­துள்ளோம்.

அதில் விடு­த­லைப்­பு­லி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட 18 வகை­யான அநி­யா­யங்கள் தொடர்பில் குறிப்­பிட்­டுள்ளோம். குறிப்­பாக இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக யுத்தம் புரிந்­தமை, மனி­தப்­ப­டு­கொலை, பொது­மக்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள், மனித வெடி­குண்­டு­களைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள், சிறு­வர்­களை இணைத்துக் கொண்­டமை, யுத்­தக்­கை­தி­களைக் கொலை செய்­தமை மற்றும் கடற்­கொள்ளை போன்ற 18க்கு மேற்­பட்ட பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு விடு­தலைப் புலிகள் பொறுப்புக் கூற வேண்டும்.

அதே­போன்று இலங்­கையின் சட்­ட­திட்­டத்­திற்­க­மைய எந்­த­வொரு குற்றச் செய­லுக்கும் உத­வி­பு­ரி­வதும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வதும் சதித்­திட்டம் தீட்­டு­வதும் அநி­யா­ய­மாகும். ஆகை­யினால் இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பூரண விசா­ரணை ஒன்றை மேற்­கொள்­ளு­மாறு பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்ளோம்.

மேலும் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் 16 அமைப்­புகள் மற்றும் 2014 ஆம் ஆண்டு வர்த்­த­மா­னியில் பெயர், முக­வ­ரி­யுடன் பிர­சு­ரிக்­கப்­பட்ட 424பேர் தொடர்­பா­கவும் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் எனவும் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்ளோம்.

அத்­துடன் இவர்­களில் சிலர் வெளி­நா­டு­களில் இருந்தால், ஐக்­கிய நாடுகள் பாது­காப்­புச்­ச­பை­யுடன் 2001ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் அதா­வது ஐக்­கிய நாடு­களில் அங்­கத்­துவம் பெற்­றுள்ள எந்­த­வொரு நாடும் பயங்­க­ர­வாதம் தொடர்பில் விசா­ரணை நடத்தும் போது அதற்கு அங்­கத்­துவ நாடுகள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்ற இணக்­கப்­பாட்டின் பிர­காரம் வெளி­நா­டு­களில் உள்ள விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் சம்­பந்­த­மாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு சர்வதேசத்திடம் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே சர்வதேசமும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்காக எங்களிடம் ஒப்படைக்கும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :