Featured Home (TOP)

Recent Comments

Friday, October 9, 2015

avathani Media Network

அரச பல்கலைகழகங்களில் அனுமதி பெற சராசரியாக ஒரு வருடத்திற்கு 5 - 15 லட்சம் ரூபாய் கட்டணம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வெளிநாடுகளில் கல்விகற்கும்  புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை அரசபல்கலைகழகங்களில் அனுமதி பெற சராசரியாக ஒரு வருடத்திற்கு 5 - 15 லட்சம் ரூபாய் கட்டணம் காலம்காலமாக அறவிடப் படுகின்றமை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இது பற்றி இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் ரகீப் ஜௌபெரை   வினவியபோது “ இது ஒரு வருடத்திற்குரிய கட்டணமாகும் . மொத்த அனுமதிகளில் 0.5% (5 /1000) வீத அனுமதிகளேவெளிநாட்டில் கல்வி கற்ற மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஐந்து வகையானபிரிவினருக்கு இந்த 0.5% பகிர்ந்தளிக்கப்படுகின்றமை  இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னுரிமை வரிசைப்படி 1.வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை அரச சேவை அதிகாரிகளின் பிள்ளைகள் 2. இலங்கையில் வசிக்கும்வெளிநாட்டு அதிகாரிகளின் பிள்ளைகள் 3. சார்க் நாடுகளின் பிரஜைகள் 4. வெளிநாடுகளில் வசிக்கும்இலங்கையர்கள் 5. வேறு பிரிவினர் களுமாகும். அதிலும் நான்காவது முன்னுரிமையே புலம்பெயர்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப் படுகின்றமையானது மிகவும் ஏமாற்றத்திற்குரியது. காலாகாலமாக நடைபெறும் இந்த விடயத்தை பற்றி இதுவரை எவரும் பேசியதுமில்லை.
இன்று சுமார் 15 லட்சம் புலம்பெயர் ஏழைத் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் வசித்து வரும் நிலையில்.இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியான இவர்களுக்கு இவ்வளவு நாளும் அரசாங்கம் கொடுத்தபிரதிபலன்  இதுதானா என்றே கேட்க தோன்றுகிறது. இங்கு அநேகமானவர்களின் வருமானம்,  பிள்ளைகளைதனியார் பல்கலைக் கழகங்களில்  சேர்த்து விடுமளவிற்கு போதாது. ஒரு சிறிய சம்பளத் திற்குள் குடும்பதோடுவாழவேண்டும் என்பதற்காகவே ஒன்றாக காலம் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் . சேமிப்பே இல்லாதஇவர்கள் ஒவ்வொரு பிள்ளை யினதும்  உயர்கல்விக்காகவும்  50 லட்சம் பணத்திற்கு எங்கே போவார்கள்.வெளிநாடு என்றால் காசுதான் என்கின்ற மாயையால் புலம் பெயர் தொழிலாளர்களின் கஷ்டங்கள்மழுங்கடிக்கப்படுகின்றன . அநேகமான தொழிலாளர்களுக்கு 2 அல்லது 3 பிள்ளைகளுக்கு மேல் இருக்கையில் ,இவர்களின் நிலையை நம் அரசாங்கம்  ஏன் சிந்திக்க தவறியது ?. பொருளாதார வசதி இல்லாத சிலர்முன்கூட்டியே தனது குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பி விட்டு குடும்பத்தை பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இது மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்.
இன்று, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது ஒரு பெரும் சுமையாக மாறி, சர்வேதேச  பாடசாலைகளில்படித்து , நல்ல தகைமை இருந்தும்,  வறுமையின் காரணமாக  இதற்கு ஈடு கொடுக்க முடியாமல்; ஒன்றுபிள்ளைகளின் தகைமைக்கு ஏற்பில்லாத கற்கை நெறி களுக்கு சேர்த்து விடுகிறார்கள்  , அல்லது படிப்பைபாதியில் நிறுத்தி விட்டு சிறிய தொழில் துறைக்கும் சேர்த்து விடுகிறார்கள்.
அரசாங்கம் உடனடியாக இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து,  புலம்பெயர் தொழிலாளர்களின்பிள்ளைகளுக்குரிய கட்டணத்தை நிறுத்தி, அதை இலவசமாக்கி மேலும் புலம் பெயர் தொழிலாளர்களின்பிள்ளைகளுக்கு விசேட ஒதுக்கீட்டின் முலம் இலவச பல்கலைக்கழக அனுமதியை உறுதிப்படுத்த வேண்டும். 
இதற்காக  குரல் கொடுக்க  இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டணி என்றும் முன்னிற்கும். இதே போலஇன்னும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது.  இவ்வாறான தேசிய ரீதியான பிரச்சினைகளை  களைவதற்கேநாங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாக்களிப்பு வசதியைக் கோரி நிற்கின்றோம். இன்று எமதுஅமைப்பில் மூவின மக்களும் , தொண்டு நிறுவனங்களும் இணைந்த வண்ணமுள்ளனர், புலம்பெயர்தொழிலாளர்களுக்கான , ஒருமித்த பாதுகாவலனை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.  வாக்குரிமை எனும்விடயத்தில் எந்த நிலையிலும்  நாங்கள் பின்நிற்கப் போவதில்லை. அதே போல் நல்ல மனம் படைத்த சமுகசிந்தனையாளர்கள் எம்மோடு கைகோர்க்கவும் அழைப்பு விடுக்கிறோம். இது நிமிர்த்தம் எமதுஇணையத்தினூடாக எவரும் எம்மை தொடர்பு கொள்ளலாம் www.slmwa.com  ". என்றும் கூறினர், 




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :