Featured Home (TOP)

Recent Comments

Monday, October 5, 2015

avathani Media Network

உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டம் காரைதீவு பிரதேசசெயலக எல்லைக்குள் ஆரம்பம்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட  'பசுமையான மாதம்' எனும் 'உணவு உற்பத்தி தேசிய வேலைத்
திட்டம்' இன்று (05) காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இவ்வாரம்ப நிகழ்வு காரைதீவு பிரதேச எல்லைக்குட்பட்ட 'பறயடி வெளி வாய்க்கால்' அருகில் சிறப்பாக இடம்பெற்றது. 
இவ்வாரம்ப நிகழ்வில் பிரதம அதிதி உட்பட அனைத்து அதிதிகள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் அனைவரும் வாய்க்கால், வயல்வெளிகளில் இறங்கி நின்று துப்பரவு செய்யும் பணிகளைத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகக் காணப்பட்டது.

'இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு கமநல சேவைகள் மத்திய நிலையம், நீர்பாசனத் திணைக்களம், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் என்போர் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்க அம்சமாகும்' என்று மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பாராட்டுத் தெரிவித்தார்.










avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :