Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 31, 2015

avathani Media Network

நிந்தவூர் மையவாடியில் மர நடுகை மற்றும் சிரமதான நிகழ்வு.

(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்.)

இலங்கை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் மர நடுகைத் திட்டத்தின் கீழ் இன்று 31-10-2015 சினிக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.ஐ. அசத்துல்லாஹ் அவர்களின் தலமையில் நிந்தவூர்-2ம், பிரிவுகுள்ளான மையவாடியைச் சுற்றிவரை மர நடுகை வைபவம் இடம்பெற்றதையடுத்து மையவாடியை சுத்தப்படுத்தும் சிரமதான பணியும் இடம்பெற்றது இச் சிரமதான பணியில் நிந்தவூர் கரையோர கடற்கரை சங்கம், ஓடாவிச் சங்கம் மற்றும் சமுகசேவை பிரிவினரும் கலந்துகொண்டனர்.

மேலும் இவ் வைபவத்துக்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்கள் கலந்துகொண்டதோடு மேலும் நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள், உதவி விவசாய பணிப்பாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் "ரீமா பிஸ்கட் (teemah Biscut) கம்பனி உரிமையாளரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும் எதிர்வரும் தினங்களில் நிந்தவூரில் உள்ள அனைத்து மையவாடிகளிலும் இதுபோன்ற மர நடுகை மேற்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.  





       

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :