Featured Home (TOP)

Recent Comments

Friday, October 23, 2015

avathani Media Network

விமல் வீரவன்சவுக்கு பிணை

கடவுச் சீட்டு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினை காரணமாக இன்று அதிகாலை தொடக்கம் விமல் வீரவன்ச விமான நிலையத்தில் சி.ஐ.டி. யினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து தினேஸ் குணவர்த்தன பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, அவருக்கு தன் பயணத்தைத் தொடர அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குடிவரவுத் திணைகக்ள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் விமல் வீரவன்சவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவர் வெளிநாடு செல்ல முயன்றதே இதற்கான காரணமாகும்.
ஒரு கடவுச்சீட்டு காணாமல் போன நிலையில் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன கடவுச்சீட்டு மீண்டும் கிடைத்தாலும் அதனை குடிவரவுத்திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மற்றபடி அதனை பயன்படுத்துவது கடும் குற்றமாகும். இதனையே விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  விமல் வீரவன்சவிடம்  வாக்குமூலத்தைப் பெற்றதையடுத்து அவரை கைது நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :