Featured Home (TOP)

Recent Comments

Monday, October 26, 2015

avathani Media Network

சல்மா ஹம்சாவுக்கும் ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

unnamedபெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்;தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப் பொன்று (24.10.2015) காத்தான்குடியிலுள்ள பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் இடம் பெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுடைய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்தின் பிரதிநிதி எச்.ஹெசன் மற்றும் அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பேர்ட்டி ஹீன்பல மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்;தின் நிதியுதவியுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுடைய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதறகாக அவர்களுக்கு சிறு கைத்தொழில் தொடர்பான உற்பத்திப்பயிற்சியினை வழங்கி அவர்களின் வாழ்வதாரத்தை ஊக்குவித்து நாளொன்றுக்கு 400 ரூபா முதல் 500 ரூபாவரையிலான வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் பொருட்டு இந்த சிறுகைத் தொழில் திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதாக திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 30 வயதுக்குமேற்பட்ட கனவனை இழந்த விதவைப் பெண்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் என 100 பெண்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் திருமதி சல்மா ஹம்சா மேலும் தெரிவித்தார். த

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :