Featured Home (TOP)

Recent Comments

Sunday, October 11, 2015

avathani Media Network

பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு?

எதிர்­வரும் சில தினங்­களில் அத்­தி­ய­ாவ­சிய உணவுப் பொருட்கள் உள்­ள­டங்­க­லாக பொருட்கள் சில­வற்றின் விலை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது. பால்மா, சீனி,
பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்­களின் விலை­களே அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் சமையல் எரி­வாயு, இறக்­கு­மதி செய்­யப்படும் விவ­சாயப் பொருட்கள், தொலைத் தொடர்பு சாத­னங்­களின் விலையும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தா கத் தெரிய வரு­கி­றது.
இலங்கை ரூபாவின் பெறு­மா­னத்தை நிலை­யாகப் பேணத் தவ­றி­ய­மையே குறித்த விலை அதி­க­ரிப்­புக்கு கார­ண­மாக அமைந்­தி­ருப்­ப­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.
எனவே, உலக வர்த்­தக சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலையில் வீழ்ச் சி ஏற்­பட்­டுள்­ள­போ­திலும் இலங்கை ரூபாவின் நிலை­யான பெறு­மா­னத் தைப் பேணத் தவ­றி­யதன் கார­ண­மாக அந்த விலை வீழ்ச்­சியை நுகர்வோர் அனு­ப­விக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் அமைக்கப்­பட்ட புதிய அர­சாங்­கத் தின் நூறு நாள் வேலைத்­திட்­டத்­திற்­கி­ணங்க சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால வரவு – செல­வுத்­திட்­டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் சில­வற் றின் விலை குறைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
எனினும் அதன் பின்னர் குறித்த சில உணவுப் பொருட்­களின் விலை யில் அதி­க­ரிப்பு ஏற்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யி­லேயே எதிர்­வரும் சில தினங்­களில் விலை அதி­க ­ரிக்­கப்­ப­ட ­வுள்­ள­தாகத்தெரிய வரு­கி­றது. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்க ளின் விலை அண்மையில் அதிகரிக் கப்பட்டபோதிலும் மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் தெரிய வருகிறது.
virakesary.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :