Featured Home (TOP)

Recent Comments

Wednesday, October 21, 2015

avathani Media Network

கண்டியை நோக்கிய பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை மாணவர்களின் - கல்விச் சுற்றுலா –படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை மாணவர்களின் ஒருநாள்  கல்விச் சுற்றுலா அண்மையில் காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி கதுருவளை, ஹபரனை, அக்குரணை ஊடாக கண்டியை சென்றடைந்தது.

மேற்படி கல்விச் சுற்றுலாவில் பிஸ்மி பாடசாலை மாணவ மாணவிகள் 107 பேர்; கலந்துகொண்டதோடு பிஸ்மி குழுமத்தின் தவிசாளர், பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் பணிப்பாளர், உட்பட ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இக் கல்விச் சுற்றுலாவில் குறித்த பாடசாலை மாணவ மாணவிகள் பேராதனை பல்கலைக்கழகம், பேராதனை தாவரவியல் பூங்கா, கண்டி தலதா மாளிகை, தெப்பக்குளம், கண்டி சிற்றி சென்டர் பேரங்காடி ஆகிய முக்கிய இடங்களை பார்வையிட்டதுடன் பல்வேறு விடயங்களையும் அறிந்து கொண்டனர்.

சுற்றுலா செல்லும் வழியில் பராக்கிரமபாகு சமுத்திரத்தினையும் பார்வையிட்டனர்.

இச் சுற்றுலாவின் விஷேட அம்சமாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலநிலை மாற்றம் சம்பந்தமான கண்காட்சி ஒன்றையும் பிஸ்மி பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டதோடு தெப்பக் குளத்தில் படகுச் சவாரியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :