Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 13, 2015

avathani Media Network

தாய்லாந்தில் இலங்கை இளம்; முஸ்லிம் மாதர் சங்கப் பிரதிநிதிகள்!

(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்) 

தாய்லாந்தின் தலைநகரான பெங்கொக்கில் அமைந்துள்ள மலேசிய தூதரகத்தின் ஏற்பாட்டில்  மலேசியாவின் 58ஆவது தேசிய தின விழா கடந்த மாதம் பெங்கொக் நகரில்;
வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொள்ளுமாறு தாய்லாந்து நாட்டுக்கான மலேசிய தூதுவரான
டத்தோ.நசீரா ஹுசைன் அவர்கள் இலங்கை இளம் மாதர் முஸ்லிம் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பின் பேரில் இளம் மாதர் முஸ்லிம் சங்கத் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில், உப தலைவர்களான நவாசியா பாரூக், ஷலீனா மாஹிர,; பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா, சங்க உறுப்பினர்களான கரீமா மூசீன் சுல்பத்அலி; மற்றும் ஊடக இணைப்பாளரான நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தேசிய தலைவரான காலித் பாரூக் தலைமையில் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

அச்சமயம் இளம் மாதர் முஸ்லிம்; சங்கத்தலைவியான மக்கியா முஸம்மில் மலேசிய தூதுவரான டத்தோ. நசீரா ஹுசைன் அவர்களை கௌரவிக்கும் முகமாக அன்னாருக்கு எமது சங்கத்தின் சார்பில் நினைவுச்சின்னம் ஒன்றையும்  கையளித்தார்.


படமும் தகவலும்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :