இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது சவூதி அரேபியாவில் தொழில் செய்து வரும் கவிஞர், எழுத்தாளர் முஹம்மது பாயிஸ் (முபா) அவர்கள் தற்போது மிகவும் அற்புதமான முப்பரிமாண ஓவியங்களை வரைந்து வாசகர்களை அசத்தி வருகிறார்.
இவரது கைவண்ண ஓவியங்கள் அவரது முகநூலிலும் முகநூல் பக்கத்திலும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவரை அவதானி இணயத்தளம் வாழ்த்தி வரவேற்பதுடன் அவர் வரைந்த ஓவியங்கள் சிலதையும் இங்கே பதிவேற்றம் செய்கிறது.
எதிர்வரும் காலங்களிலும் இவரது ஓவியங்கள் எமது இணயத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு கலைஞனை ஊக்குவிப்பது எமது எல்லோரது கடமையுமாகும் . அப்போதுதான் அவர்களால் இதைவிட சிறப்பான படைப்புக்களை மேலும் தர முடியும்
இந்தக் கலைஞனையும் வாழ்த்துவோம் வரவேற்போம்.
இவரது முப்பரிமாண ஓவியங்களை கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்வதன் ஊடாக பார்த்துக் கொள்ள முடியும்
https://www.facebook.com/Faiz3D

















1 comments:
Write commentsvery nice
Reply