பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கு எதிராகமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணிகளால்
முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இதேவைள, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் அனைத்தும் மிகவும் சாதாரண முறையில் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று காலை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி, சுசில் பிரேம் ஜயந்த உள்ளிட்டோரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய விளம்பரத்திற்கான கட்டணத் தொகையை செலுத்தப்படாமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
source - virakesary.lk
source - virakesary.lk
