(NFGG ஊடகப்பிரிவு)
இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல்கைதிகள் எவ்வித கால தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினைமுன்வைத்து
இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள்உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை தொடக்கியிருக்கின்றார்கள். இதுவிடயமாக நல்லாட்சிக்கான தேசியமுன்னணி தன்னுடய முழுமையான கவனத்தையும் கரிசணையினையும் கொண்டிருக்கின்றது. ஒரு தேசத்தில்அரசியல் நோக்கங்களுக்காக அகிம்சை ரீதியாகஇ அறிவு ரீதியாகஇ ஆயுத ரீதியாக போராட்டங்கள்இடம்பெறுகின்றபோது அங்கே குறித்த தேசத்தின் அரசினால் கைதுசெய்யப்படுகின்ற குறித்த கிளர்ச்சியாளர்கள்அரசியல் கைதிகள் என அழைக்கப்படுவார்கள்.
எமது நாட்டிலும் கடந்த 30 வருடங்களாக தமிழ் ஈழக்கோரிக்கையினை முன்வைத்து பல ஆயுதக் குழுக்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்கின்றன. வன்முறையான வழிமுறைகளின் மூலம் மக்களின் உரிமைகளைவென்றடுக்க முடியாது என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படை நிலைப்பாடாகும்.இதனடிப்படையில் கடந்த கால வன்முறைப் போராட்டங்களை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம்.இருப்பினும் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் மக்கள் மத்தியில் சமாதானமும் சகவாழ்வும்கட்டியெழுப்பப்படவேண்டும். கடந்த மஹிந்த அரசாங்கத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 12000போராளிகள் கைது செய்யப்பட்டுஇ புனர்வாழ்வளிக்கப்பட்டு இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.இது வரவேற்கத்தக்க ஒரு விடயம்.
போரின் ஆரம்ப காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் என ஒரு தொகுதிகைதிகள் மிக நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் ஒரு சிலர் 20வருடங்களையும்தாண்டி இவ்வாறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்இ பலர் உரிய விசாரணைகள் எதுவுமின்றியும்இஇன்னும் சிலர் சாட்சியங்கள் இன்றியும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது எமது நாட்டின் நீதி வழங்கும் வழிமுறைக்கு முரணானது. எமது நாட்டில் கடந்த காலங்களில் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் என பல நூறுபேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் பொது மன்னிப்புவழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இப்போது யுத்தம் நிறைவடைந்திருக்கின்றதுஇ நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜெனீவா மனிதஉரிமை ஆணையகத்தில் நம்பிக்கை தரக்கூடிய பிரேரணை முன்மொழியப்பட்டு அது இலங்கையின்இனமுரண்பாட்டைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையாக முன்வைக்கப்படவிருக்கின்றது. இவ்வாறானசூழ்நிலையில் சுமார் 270ற்கும் அதிகமானவர்கள் அரசியல் கைதிகள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற ஒரு நடவடிக்கை என்றே எமக்குத் தோன்றுகின்றது. அண்மையில்விடுதலை செய்யப்பட்ட திருமதி சர்மா அவர்கள் 16 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றினால்கடந்த வாரம் நிரபராதி என்று தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்இ அவர் 16 வருடங்கள்தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதி என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றதுஇ ஆனால் அவரது 16வருடசிறைவாழ்வு அவரின் இயல்பான வாழ்வை சின்னாபின்னபடுத்தியிருக்கின்றதுஇ இதற்கு யார் பதில் சொல்வது.இவ்வாறு குற்றங்களோடு தொடர்பில்லாத பலரும் குறித்த அரசியல் கைதிகளுள் இருக்கின்றார்கள்.
அதே நேரம் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு கொண்டு யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய பலர் எத்தகைய விசாசாரனைகளும் இன்றி மிகவும் சுதந்திரமாக நடமாடுவதுடன் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களாகஇ பாராளுமன்ற உறுப்பினர்களாகஇ மாகண சபை அங்கத்தவர்களாகக் கூட இருந்ததை நாம் அவதானித்தோம்.
மேலும் சந்தேகத்தின் பேரில் சிறைக் கைதிகளாக இருப்பவர்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கியிருந்தால் கூட இவ்வளவு காலம் அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
எனவே அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இதுவிடயத்தில் உடனடியாகத் தலையிட்டு இவ்வரசியல் கைதிகளின்மனிதாபிமானக் கோரிக்கையினை கவனத்தில் எடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்ககைகளை உடனடியாகநிறைவேற்ற வேண்டும் என ந.தே.மு வேண்டுகோள் விடுக்கின்றது.
