காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) நடாத்தும் இரண்டாவது மாபெரும் சிர்க் ஒழிப்பு மாநாடு
காத்தான்குடியை தலைமையகமாகக் கொண்டியங்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) நடாத்தும் இரண்டாவது சிர்க் ஒழிப்பு மகாநாடு எதிர் வரும் 09.10.2015 வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடியில் இடம் பெறவுள்ளது.
காத்தான்குடி பஸ்மலா சதுக்கத்தில் மாலை 04.30 தொடக்கம் இரவு 10.00 மணி வரை இடம் பெறவுள்ள இம்மகா நாட்டில் சிர்க் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் தெளிவு படுத்தப்படவுள்ளதுடன் அவை தொடர்பான வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்படவுள்ளன.
இம் மகாநாட்டின் நேரடி உரைகள் NTJ யின் www.ntjweb.com எனும் உத்தியோக பூர்வமான இணயத்தளத்திலும் ஒலி ஒளி பரப்புச் செய்யப்படவுள்ளது.
இம்மாகாநாட்டில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதன் நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
தகவல்
மௌலவி M.C.M ஸைனீ (உமரீ)
About avathani Media Network -
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.