கொடிகாமத்தினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை காணவில்லை என்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அவருடைய பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சஞ்சீவினி குணரத்தினம் (வயது 15) என்னும் சிறுமியே காணமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
கொடிகாமம் பகுதியில் உள்ள பாலாவி வடக்கில் வசித்துவரும் குறித்த சிறுமி நேற்று 01ம் திகதி ஆலயத்திற்கு காலை 9.30 துவிச்சக்கரவண்டியில் சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை என முறையிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரனைமேற்கொண்டு வருகின்றனர்
