Featured Home (TOP)

Recent Comments

Sunday, November 29, 2015

avathani Media Network

மஹிந்தவின் கடன்களை அடைக்க 400 பில்லியன் தேவை : பிரதமர்

முன்னைய அரசாங்கத்தின் நிர்மாணத் திட்டங்களுக்கென 400 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து இந்த தொகையை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரிமாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பெந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டிருந்த இரண்டு கட்டடங்கங்களின் ஒரு கட்டட நிர்மாணப் பணிகளை தாம் இடைநிறுத்தியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கிராமத்திற்கு கிராம் – வீட்டுக்கு வீடு திட்ட நிர்மாணத் திட்டங்களை பூர்த்தி செய்த ஒப்பந்தங்காரர்களுக்கான கொடுப்பனவுகள் இயன்றளவு விரைவில் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :