இலங்கையின் சிறப்பு மிக்க தனியார் உயர் கல்வி நிறுவனமான BCAS Campus, தொழில் நுட்ப மற்றும் உயர் கல்விக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. BCAS Expo
2015 என்ற மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விசேட கண்காட்சி இம்மாதம் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இல: 256, காலிவீதி, கொழும்பு. 06 (வெள்ளவத்தை) இல் அமைந்துள்ள BCAS City Campus வளாகத்தில் காலை 09.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை நடைபெறவுள்ள BCAS Expo
2015 கண்காட்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல், கணினி மற்றும் உயிரியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வரும் BCAS Campus தனது மாணவர்களினால் உருவாக்கப்பட்ட புதுமையும், சுவாரஸ்யமும் நிறைந்த பல்வேறு தொழில் நுட்ப அம்சங்களை ( Innovative
Technologies and Student projects) இதில் காட்சிப்படுத்தவுள்ளது. அத்தோடு உயிரியில் விஞ்ஞானத்துறை மாணவர்களின் வீசேட செயற்திட்டங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை என்பனவும் BCAS
Campus இன் விஞ்ஞான பீடத்தினால் நடாத்தப்படவுள்ளன.
அத்தோடு இந்த BCAS Expo 2015 நிகழ்வில் மாணவர்களின் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் வழங்குணர்கள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதோடு மாணவர்களின் உயர் கல்விக்கான கடன் திட்டங்களை வழங்கும் வங்கிகள் பலவும் இதில் கலந்து கொள்ளவுள்ளன.
மேலும், வெளிநாட்டு உயர் கல்விக்கு வழிகாட்டும் இலவச ஆலோசனைப் பட்டறைகளும் இதில் இடம்பெறவுள்ளதுடன் இதில் பங்குபற்றுவோருக்கு பரிசில்களை வழங்கும் போட்டி நிகழ்ச்சிகள் உட்பட சுவாரஸ்யமான நிகழ்வுகள் பலவும் இடம் பெறவுள்ளன.
BCAS Expo -2015 கண்காட்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என ஆர்வமுள்ள அத்தனை பேர்களையும் கலந்து கொள்ளுமாறு BCAS
Campus அன்புடன் வரவேற்கிறது.

