Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 19, 2015

avathani Media Network

யார் இவர்கள்..?

( மஸாகி )

அப்பாவிகளா..?
அல்லதுஅடப்பாவிகளா..?

ஐயோ ஐயோஎன்று
கதறக் கதற சுட்டுத் தள்ளும்
தீவிரவாதம் எப்படி - இஸ்லாமிய அரசாக முடியும்..?

வல்லரசுகள்
விதைப்பது அவர்களையாகட்டும்ஆனால்,
அறுப்பது எங்களையல்லவா..?

இவர்கள்ஆயுதம் தரித்து
அநீதிக்காக போராட வந்தவர்களா..?
அல்லதுஅநீதியை நிலைநாட்ட வந்தவர்களா..?

இவர்கள்கருப்புடையணிந்து
இருட்டினைப் போக்க வந்தவர்களா..?
அல்லதுகும்மிருட்டினை திணிக்க வந்தவர்களா..?

அவர்கள்தகர்ப்பது
ஆலயங்களை அல்ல..
இஸ்லாமிய யுத்த தர்மங்களை..

அவர்கள்கொல்வது
குழந்தைகளை அல்ல..
குர்ஆனின் ஜீவகாரூண்ய போதனைகளை..

தீவிரவாதம் ஒருபோதும் தீர்வாகாது..
சாந்திமார்க்கம் இஸ்லாமும்
அதைப் போதிக்காது..

 ஸ்லாம்
அடைக்கலமானவர்களுக்கு
அரண்கொடுக்க வாள் எடுத்ததே தவிர,
அதைப் - பரப்புவதற்காக அல்ல..

இஸ்லாமியர் 
நெஞ்சு நிமிர்த்தி - அநீதிக்கெதிராய்,
போர் புரிந்தார்களே தவிர
போற வாரவனைக் கொன்றுவிட்டு,
பொறம்போக்காய் - செத்துமடியவில்லை..

அவர்கள்
சட்டலைட்டு வைத்துசாகடித்தால்,
அதை தகர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி
வானிலேயே சமாதிகட்டு..

அவர்கள்
உற்பத்தி திறமையை
உள்ளங் கையில் வைத்திருந்தால்,
நீ விரலசைவில் - வியாபார சந்தையை வளைத்து,
வல்லரசுகளை திணறடி...

உன் அழிவால்
அழிவுகளையே வளர்க்க முடியும்..
ஆனால்ஆக்கத்தால்,
அவர்களையே வாங்க முடியும்..

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திடம்
இல்லாதது எது..?
மத்திய கிழக்கு மண்ணில்,
கிடைக்காத பொக்கிஷம் எது..?


நாமெதற்கு அவர்களிடம்
உயிர்பிச்சை கேட்க வேண்டும்..?
அவர்கள்தான்எம்மிடம்
மடிப்பிச்சை வாங்க வேண்டும்..

எமது
சோம்பேறித் தனத்தால்,
அவர்களை தோண்டவிட்டதால்தான்
எமது சாம்ராஜ்ஜியத்தின்
அடிக்கல்லை தோண்டி தோண்டி
அவர்களின் குடிசைகளுக்கு
அஸ்திவாரம் போடுகின்றார்கள்..

இஸ்லாத்திற்கும்
இந்த கயவர்களுக்கும்
இடையில் முளைத்தஇந்த
முடிச்சவிக்கிகள் யார்..?

இவர்கள் உண்மையானவர்களா..? அல்லது
இவர்களை ஊடகங்கள் பொய்ப்பிக்கின்றனவா..?
முடிச்சவிழும் - முகமூடியும் கிழியும்ஒருநாள்..

Because,
அவர்கள்
ஏமாற்ற நினைப்பது எம்மையல்ல..
ஏந்திய கையில் இரத்தம் சொட்டும்அதிகபட்ச,
அநீதி இழைக்கப்பட்டவர்களின் - இறைவனை..

சூழ்ச்சியாளர்களின்ஆட்சியாளன்
இந்தமாதிரி விளையாட்டைஎப்பொழுதும்,

வேடிக்கை மட்டும் பார்ப்பதில்லை..

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :